
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரனுடன் தேவை ஏற்படின் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் விக்னேஸ்வரனது கருத்துக்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் இன்று (30) அலரி மாளிகையில் ஜனாதிபதியிடம் கேள்வினொன்றை முன்வைத்தார்.
அதற்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது மட்டும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டியதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவரே மாகாண சபைகளுக்கு முதலமைச்சராக தெரிவு செய்யப்படுவார். அவ்வாறாகவே இம்முறை தேர்தலும் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
யுத்தத்தின்போது காணாமற்போனோர் தொடர்பில் மூவர் அடங்கிய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவ் ஆணைக்குழு எவரினதும் தலையீடு இன்றி சுதந்திரமாக செயற்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
Post a Comment