ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நிகழ்த்திய தந்தை செல்வா நினைவுச் சொற்பொழிவுகள் அடங்கிய 'சாத்வீகப் போராட்டமும் பிரயோக வலுவுள்ள அரசியலும்' என்ற தமிழ், ஆங்கில மொழிகளிலான இரு நூல்களின் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 02ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு கொழும்பு 02, வொக்ஷோல் வீதி, 51 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார, பேராசிரியர் எஸ். புத்மநாதன்,
பேராசிரியர் எஸ். சுந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றுவர். இதில் அமைச்சர்கள்,
பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள், கல்விமான்கள்,
ஊடகவியலாளர்கள் உட்பட அநேகர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Post a Comment