
அண்மைகாலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு
அச்சுறுத்தல்கள் பற்றி விரிவாக ஆராய வேண்டிய அவசியமில்லை. ஆனால் பங்காளிக்
கட்சிகள் என்று சொல்பவர்கள் உடனடியாக அரசை விட்டு வெளியேற வேண்டும் என்ற
ஒரு புதிய கோசம் நாடலாவிய ரீதியில் முஸ்லிம்கள் மத்தியில் பேசப்படுகிறது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அதன் தாக்கம் மிக அதிகம்.
நிலைமை இப்படி இருக்க அவர்கள் அப்படி வெளியேறத்தான் வேண்டுமா? என்ற
சிந்தனை சிலர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் நாம் அறிந்த
எமக்குத் தெரியவந்த சில கருத்துக்களை முன்வைப்பது எமது கடமை என
நினைக்கிறோமே தவிர எவரது புகழ்பாட வேண்டிய தேவை தற்போதைக்கு நமக்கில்லை.
அப்படியென்றால் விடயத்துக்கு வருவோம்..
மிக அண்மித்த ஆக்கம் ஒன்றில் எமது மதிப்பிற்குறிய ஒரு சிரேஸ்ட
ஊடாகவியலாளர் தெரிவித்த ஒரு கருத்துபடி உடனடியாக வெளியேறுவது பொருத்தம்
என்ற அபிப்பிராயம் முன்வைக்கப்பட்டிருந்தது. இன்னும் சிலர் இதேவிதம்
தெரிவித்தும் வருகின்றனர். அதேபோல் வடகிழக்கிற்கு வெளியிலான ஒரு சில புத்தி
ஜீவிகள் எனக் கருதப்படும் சிலரது கருத்துக்கள் இரண்டு விதமாக இருந்தது.
கருத்து ஒன்று
அரசியல் ரீதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்தவர்களால்
பாதிக்கப்பட்டவர்களும், தமது சொந்த நலன்கள் சில நிறைவேறாதவர்களும்,
அவர்களுடன் காழ்புணர்ச்சி கொண்டவர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
வெளியேற வேண்டும் என்பதை தமது பிரசாரமாகவே கொண்டுள்ளர். இதை மாற்றுவது
கடினம் என்றனர்.
ஆனால் ஏனைய முஸ்லிம் அமைச்சர்கள் அல்லது பாராளுமன்ற அங்கத்தவர்கள்
பற்றி முன் சொன்னவர்கள் எதுவும் கவலைப்படுவதில்லை என்பதையும் அவர்கள்
முன்வைத்தனர்.
இற்கு தகுந்த காரணம் இருக்கிறது…
ஒன்று இயல்பாகவே முஸ்லிம்களில் அனேகர் ஐ.தே.க. ன் அபிமானிகள்
என்பதாலும், நீண்டகாலமாக ஸ்ரீல.சு.க.மீது முஸ்லிம் எதிர்ப்புப் பிரசாரங்கள்
மேற்கொள்ளப்பட்டு வருவதனாலும் இப்படியானவர்கள் தற்போதைய அரசை ஆதரிப்பதை
அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கலாம்.
நீண்டகாலமாக முஸ்லிம்களுக்கு மத்தியில் பரப்பப்படும் ஒரு கருத்துதான்
பச்சை நிறம் இஸ்லாமிய நிறம். முஸ்லிம்களுடைய கட்சி பச்சை, நாம்
ஒருவருக்குத்தான் வாப்பா என்போம், வருடத்திற்கு வருடம் மாற்ற மாட்டோம்.
நாம் அன்று தொட்டு இன்று வரை ஒரேகட்சிதான் என்கின்ற முதியவர்கள் சிலரும்
இல்லாமல் இல்லை. 1948ல் ஆட்சிபுரிந்தது ஐ.தே.க. அதே நேரம் அன்று பதியுதின்
மஹ்மூத், சிங்கள மரைக்கார் என்றழைக்கப்பட்ட கடுகண்ணாவத் தொகுதி மரைக்கார்
ஆகியோரையும் பிரதி அமைச்சர் அப்துல் மஜீதையும் தவிர எவரும் முஸ்லிம்
அமைச்சர்களாக ஸ்ரீல.சுக. இருக்கவில்லை.
மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களது வருகையின் பின்புதான்
பாரியமாற்றத்தை ஏற்பட்டதுடன் விகிதாசாரத் தேர்தல் முறையும் அதற்கு
இசைவாகியது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளும் ஆரம்ப காலங்களில்; அவ்வளவாக
அதிகாரத்தை கையில் எடுக்கவில்லை.
மிக அண்மித்த காலத்தில் அரசை ஆதரிப்பவர்களுக்கு மட்டுமே அபிவிருத்தி
என்ற கோட்பாடு பின்பற்றப்பட்டது. இதுவும் நிறைவேற்று அதிகாரத்தில் உச்சமான
திருப்புமுனை. அதற்கு தாளமிடும் வகையில் யுத்த வெற்றியின் மமதையும் கண்
மூக்கு எதுவுதே தெரியாத அளவிற்கு இன்னும் மேலோங்கி விட்டது. எனவே
அபிவிருத்திக்காக ஆளும் தரப்பை அல்லது நாட்டின் தலைவரை ஆதரிக்கிறோம் என்ற
போர்வையில் ஆரம்பித்து இன்று அது சுகபோகம் அனுபவிக்கும் மந்திரமாகிவிட்டது.
அரசை ஆதரிக்கும் பிரதேச சபை அங்கத்தவர் ஒருவரை எடுத்துக் கொண்டால் அவரது
அதிகாரம் எத்தகையது என்றால் நாம் சிறு பிள்ளை காலத்தில் கண்ட
அமைச்சர்களைவிடவும் பல மடங்கு அதிகாரம் பொருந்திய வராக பிரதேச சபை
அங்கத்தவரின் கையாட்கள் உள்ளனர். இதற்கு சிறந்த உதாரணங்கள் பல உண்டு.
மஹியங்கனையிலும் அது நடந்தது, அனுராத புரத்திலும் அது நடந்தது.
யாழ்பாணத்திலும் நடக்கிறது. தெனுவரையிலும் நடக்கிறது. நேரடிப் புலிப்
பயங்கரவாதிகள் எனப்பட்டவர்கள் கூட இன்று அரசுடன் இணைந்த காரணத்தால்
அவ்வாறாவற்றை செய்து காட்டியுள்ளனர்.
கருத்து – 2
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசில் இருந்து வெளியேறக் கூடாது. ஆனால்
அரசு வழிய வந்து வெளியேற்றும் வரை முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்காகப்
போராட வேண்டும் என்பதாகும்.
இரண்டாவது இக்கருத்து மிக நல்ல கருத்து. ஆனால் அது எப்படி
சாத்தியமாகும். பூனைக்கு மணி கட்டிவிட்டால் நல்லதுதான். எந்த எலி
முன்வரும். இன்னொருவரது கருத்துப்படி வெளியேற முடிவெடுத்து அவ்வாறு
வெளியேறினால் தலைவர் மட்டும் கையைக் கட்டிக் கொண்டு ட்யை களற்றி விட்டு
வியர்க் வியர்க வெளியே வரவேண்டியதுதான் இன்னும் பத்துப் பேர் அந்த இடை
வெளியை நிறப்பக் காத்துக் கொண்டு இருக்கறார்கள்.
அரசை இயக்கும் ரிமோட்
எங்கள் கையில் என்று கூறிய அன்று அரசை கவிழ்க அவசரப்பட்டு அனுரா
பண்டாரநாயக்கா உடன் எதிரணியில் முதல் நாளே அமர்ந்து விட்டார். அடுத்த நாள்
வாக்கெடுப்பு இடம் பெற முன்பே முடிவு தெரிந்து விட்டது. விமல் வீர வன்ச
ரிமோல் கொண்ட்ரோலர் எனது கையில் என்று எதிரணியில் இருந்தவர் அரசுடன்
இணைந்து கொண்டார். ஹெல உரிமையின் சங்கைக்குறிய தேரர்கள் தாக்கப்டார். இவை
அனைத்தும் மறந்திருக்க முடியாது. இருதியில் மணிகட்டப் புறப்பட்ட தலைவரும்
அவரது அங்கத்தவர்களும் மாட்டிக் கொண்டார்கள். அத்தலைவரை முட்டாளாக அன்று
முழுநாடும் பேசியது. எனவே அந்த மணிகட்டும் வேலையை இரண்டாம் முறையும்
எதிர்பார்த்தால் நாம் தான் முட்டாள். அவர் எப்படியும் முதலிலே வெளியேற
மாட்டார். இதனை அவதானித்துக் கொண்டிருந்த இ.தொ.கா. போன்றவை மௌனமாகின.
இதனைப் பயன்படுத்தி சந்தர்பவாதம் பேசும் கையாட்கள் (எம்மவர்கள்)
எசமானுக்கு விசுவாசமாக நன்றாகக் குளிர் காய்ந்தனர். அப்படியான சமுக
துரோகிகளை அரியாசனத்தில் அமர்த்து வதை விட எமக்கு நல்லது செய்யா விட்டாலும்
இருப்பரே இருந்து விட்டுப் போகட்டும் என்கின்றனர். அப்படியாயின் வெளியேறக்
கூடாது என்பது அவர்களது கருத்தாகும். வரலாற்றுத் துறை முஸ்லிம்
பேராசிரியர் ஒருவரின்வின் கருத்துப்படி முஸ்லிம் காங்கிறஸ் என்ன
நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதோ அது நிறைவேறாத பட்சத்தில் எமக்கு அப்படி ஒரு
கட்சி தேவையில்லை என மக்கள் சிந்திக்க இடமுண்டு என்று கண்டியில் வைத்துத்
தெரிவித்தார்.
அமைச்சர் றவூப் ஹகீம் இது தொடர்பாக கண்டியில் வைத்துத் தெரிவித்த
இன்னொரு கருத்து ‘கோவனமும் தேவை, தலைப்பாகையும் தேவை. ஆனால் கையில்
இருப்பது சிறிய அளவு துணிதான். இதில் எதைச் செய்வது. தலையை மூடுவதும்
முக்கியம் தான். முக்கியம். என்பதற்காக ‘அவுரத்தை’ விட்டு விட்டு
தலைப்பாகைக்குப் போக முடியாதே. இருக்கும் கொஞ்ச அங்கத்தவர்களையாவது தலைவன்
என்ற அடிப்படையில் நான் பாதுகாக்கவேண்டுமே என்றார்.’
இன்னொருவரது கருத்துப்படி உண்மையாக எமது பிரதி நிதிகள் என்று
கூறக்கூடியவர்கள் முஸ்லிம்காங்கிரஸ் காரர்கள் மட்டுமே. ஏனையவர்கள்
கொந்தராத்து அடிப்படையில் எப்படியோ பாரளுமன்றம் ஏறியவர்கள் என்றே
கருதப்படுகின்றனர். கொந்தராத்து கொடுத்த எசமானுக்கு விசுவாசம்
காட்டாவிட்டால் அவர்கள் பாடு பெரும்பாடகிவிடுமே. அவர்களுக்கு சாம்பிராணி
பிடித்து பேய்விரட்டிகள் பயன் படுத்தும் ‘தும்மலைப்’ புகை பிடித்து
விரட்டினாலும் அவர்ககளை விரட்டமுடியாது. அவர்கள் சொல்வதை நாம் செவி
மடுக்கத் தேவையுமில்லை. அப்டியான நிலையில் ஏதோ பெயரளவிலாவது கொஞ்சப் பேர்
அரசுடன் இருந்து போகட்டுமே’ என்றனர்.
அப்படியாயின் ஸ்ரீலங்கா மு.க. உறுப்பினர்களும் அப்படியான
கொந்தராத்துக் காரர்கள்தானே? எனக் கேட்டபோது அது கிழக்கு மாகாணத் தேர்தலில்
வழங்கப்பட்ட கொந்தராத்தை மிகச் கச்சிதமாகச் செய்தார்கள். அதற்குறிய சரியான
பதிலை கிழங்கிழங்கை மக்கள் கொடுப்பார்கள். கிழக்கிற்கு வெளியே உள்ளவர்கள்
அது பற்றி கவலைப் படத்தேவையில்ல. ஆனால் ஏற்கனவே முடிந்த பாராளு மன்றத்
தேர்தலில் நாம் வாக்களிக்கும் போது அவர்கள் அப்படி அரச கொந்ராத்துடன்
வரவில்லை. ஐ.தே.க. தோல்வி அடைந்ததால் அவர்களும் அபிவிருத்திக்காக அரசு
ஆதரவு பட்டியலில் இடம் பிடித்துள்ளார்கள். எனவே கிழக்கிற்கு வெளியே உள்ள
நிலைமையை வைத்தே அவர்கள் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
அப்படி என்றால் கிழக்கிற்கு வெளியே என்ன முடிவு எனக் கேட்டபோது-
தலைவர் மட்டும் வெளியே வரவேண்டியதுதான். அடுத்த தேர்தலுக்கு முன் ஏனைய
ஒவ்வொருவரும் ஆளுக்கு இரண்டு அல்லது மூன்று கட்சிகளை அமைத்து போதாமைக்கு
அதில் கூட்டணிகள் என்ற பெயரில் இன்னும் சில கூட்டுக் கட்சிகளையும் அமைந்து
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதற்குப் பதிலாக நாம் எல்லோரும்
தலைவர்கள் என்று கற்பனைக்கு எட்டாத சுகபோகத்தில் மிதப்பர். அதனை செய்ய நாம்
இடம் விட்டு சமுகத்தின் மீண்டுமொரு சாபக் கேட்டிற்கு பங்காளியாக
வேண்டுமா? என்றார்.
மேலும் ஊடகவியலாளர் ஒருவரது ஆக்கத்தில் ஆக்கத்தில் இன்னுமொரு இடத்தில்
முஸ்லிம் பிரதி அமைச்சர் ஒருவரை மேற்கோள் காட்டி அவர் கொடுத்தபதில்
முஸ்லிம் அரசியலின் வங்கரோத்து நிலையைக் காட்டுவதாகத் தெரிவித்திருந்தார்.
அது வங்குரோத்து நிலை அல்ல. எசமானுக்குக் காட்டும் விசுவாசம் என்றார்
ஒருவர். அன்பர் பிரதி அமைச்சரும் அந்த ஊடகவியலாரும் ஒரே வழியில் வந்த இரு
சந்ததிகள் என்பதாலும் அவர்களது முதாதையர்கள் ஒரேகிராமத்தைச் சேர்ந்தவர்கள்
என்ற வகையிலும் இது அவ் ஊடகவியலாளருக்கு நன்கு விளங்கும் என்று மடவளையைச்
சேர்ந்த ஒருவர் கூறினார்.
எனவே இறுதியாக இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது
கோழையாகி வெளியேறாது பேராடி வெளியேற்றப்படுவதே மேல் என்ற ஒரு கருத்தை
வாசகர்கள் சிந்தனைக்கு முன் வைக்கிறோம்.
-jaffna muslim
Post a Comment