
இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அவர்கள் மிகவும் மனவேதனையுடன் சில கருத்துக்களை பரிமாறினார்
பலாங்கொட பிரதேசத்தில் முஸ்லிம் வியாபாரி ஒருவரால் இளம் பிக்கு ஒருவர்
துஷ்பிரயோகம் செய்யப்பட்டதன் காரணமாக முஸ்லிம்களுக்கு எதிராக
ஒருகொந்தளிப்பு நிலை ஏற்பட்டபோது தான் பிரத்தியேகமாக தலையிட்டு இந்த
விடயத்தை ஊடகங்களுக்குக் கூட செல்லாத முறையில் பாதுகாத்த்தாகவும் இதேபோல்
முஸ்லிம் ஒருவரால் வெளிமடையில் எட்டு வயது சிறுமி ஒருவர்
துஷ்பிரயோகப்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்றும் நடந்ததாகவும் கூறியதோடு கடந்த
சில காலங்களில் இப்படியான பல பிரச்சனைகள் சம்பந்தமாக தான் நேரடியாக
தலையிட்டதாகவும் முஸ்லிம்கள் இப்படியான இopவான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை
தன்னால் நம்ப முடியாது எனவும் இப்படியான துர் நடவடிக்கைகளில் ஈடு படும்
முஸ்லிம்களுக்கெதிராக ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்துமாறு அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா அமைப்பிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டமென்றதுடன் சில
அரசாங்கத்திலிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தவரான முறையில் சிறிய
பிரச்சனைளை அரசியல் இலாபத்திற்காக தூக்கிப்பிடிப்பதால் பிரச்சனைகள்
தலையெடுப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
மஹியங்னை பள்ளிவாசல் விடயத்தை தான்
சுமுகமான முறையில் தீர்ப்பதற்குறிய அனைத்து முயற்சிகளையும் செய்வதாகவும்
முஸ்லிம்ளை நம்பிக்கையோடு இருக்குமாறும் குருணாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா
சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.
Post a Comment