
நாங்கள் அரசாங்கத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். அப்படி வெளியே வர முடியாது. வெளியே கடும் மழை பெய்கிறது. எங்களால் மழையில் நனைய முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“நாட்டின் அரசியல் களம் இன்று ஒரு வகையாக சூடு பிடித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் என்ன தீர்மானம் எடுக்கப் போகின்றது என்பது சம்பந்தமாக பலர் கேள்வி எழுப்புகின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து விலகி இவைகளுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்றும் சிலர் எதிர்பார்க்கினறனர்.
முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் தனித்துவமான ஒரு கட்சி. அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும் அதன் தனித்துவத்தை ஒருபோதும் கைவிடாது. அதேபோல் எங்களுக்கு அரசை வலுவிளக்க செய்யும் நோக்கமும் கிடையாது.
நாங்கள் அரசாங்கத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். அப்படி வெளியே வர முடியாது. வெளியே கடும் மழை பெய்கிறது மழையில் நனைய முடியாது. எங்கேயாவது ஒதுங்க வேண்டும். எங்கே ஒதுங்குவது? எல்லா வீடுகளது கூரைகளும் ஓட்டையாக உள்ளது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Post a Comment