Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

மஹியங்கன பள்ளிவாசலுக்குள் இன விரோதிகளின் அட்டகாசம் ! (படங்கள்)

Friday, July 120 comments

 
நேற்று இரவு தராவிஹ் தொழுகைக்கு பின் சுமார் 11 :1௦ மணியளவில்  குறிப்பிட்ட பள்ளிவாயல் அமைந்துள்ள பகுதிக்கு மட்டும் மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது, சற்றுநேரத்தில் முக மூடியணிந்த ஆறு பேர் மூன்று மோட்டார் வண்டிகளில் , கையில் வாலி ஒன்றையும் உரைய ஒன்றையும் ஏந்தி பள்ளியை நோக்கி வந்துள்ளனர் . இப்பள்ளிவாசல் நிறுவனரும் வர்த்தகருமான அல்ஹாஜ் சீனி முஹம்மது அவர்கள் வாசல் முன்றலில் நின்றுகொண்டிருந்துள்ளார். அவரது முகத்தில் மிளகாய் தூளை எறிந்தவர்கள், முன்பள்ளியின் கதவை பலமாக தட்டி  திறக்க முயற்சி செய்துள்ளனர் , பின்பு ஜன்னல் கதவுகளை உடைத்து பள்ளியினுள் புகுந்துள்ளனர். 


 பள்ளிவாயிலினுள் பன்றியின் தலை , குடல், ஈரல், இரத்தம்,  கால்கள் போன்ற உறுப்புகளை , பரந்தளவில் வீசியுள்ளனர், இது விடயமாக ஊவா மாகாண காணி அமைச்சர் அனுரா விதான கமகே அவர்களுக்கு தொலைபேசியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.   நிகழ்வு நடந்து சுமார் பதினைந்து நிமிடங்களுக்குள் அவ்விடத்துக்கு வந்துள்ள அனுரா விதான கமகே மற்றும்  மஹியங்கனை போலிஸ் உத்தியோகத்தர்களும் வருகைதந்துள்ளனர் ,  உடனடியாக பள்ளியை சுத்தம் செய்ய வேண்டும் என்ற போலிஸ் மேலதிகாரியினதும் , மாகாண அமைச்சர் அனுரா விதானகமகேயினதும் ஆலோசனைக்கு இணங்க போலிஸ்  உத்தியோகத்தர்களால் பள்ளிவாசல் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
 குறிப்பிட்ட இப்பள்ளிவாசல், மஹியங்கனை ரண்முத்து கோல்ட் ஹவ்ஸ் வியாபார ஸ்தானத்திற்கு சொந்தமான காணியில் பிரத்தியேகமாக  1991ம ஆண்டிலிருந்து இயங்கி வருகின்றது.காத்தான் குடியை சேர்ந்த அல்ஹாஜ் சீனி முஹம்மது அவர்களின் நன்கொடையால் உருவாகிய இப்பள்ளிவாசலுக்கு கடந்த காலம் நெடுகிலும் ஜும்மா தொழுகையை நிறுத்தும் படியும் பள்ளிவாசலை அகற்றிவிடும்  பல அச்சுறுத்தல்கள் விடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும் . இன்றைய ஜும்மாதொளுகைக்கு அச்சுறுத்தல் விடப்பட்டிருக்கும் வேளையில் தற்போது போலிஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்பள்ளிவாயலின் நிறுவுனர் அல் ஹாஜ் சீனி முஹம்மது அவர்கள் சுமார் 44 வருடங்களுக்கு முன் காத்தான்குடி பிரதேசத்திலிருந்து வியாபாரநோக்கில் மஹியங்கனை பிரதேசத்திற்கு வந்தவர் ஆவார . இப்பள்ளிவாயல் நிர்வாக சபைத்தலைவர் ,சுலைமான் அப்துல் ஹமீது (மலிபன் கார்மெண்ட்ஸ்) அவருடன் இணைந்து அல்ஹாஜ் சீனி முஹம்மது மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் தற்போதைய நிலவரங்களை கையாள்கின்றனர்.

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by