இரா. சம்பந்தன், ரவூப் ஹக்கீம் ஆகியோரின் கூட்டணியை ஒன்றிணைந்து செயற்பட்டு
தோற்கடிப்பதற்காக தேசப்பற்றுள்ள சக்திகள் அணித்திரள வேண்டும் என ஜாதிக
ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
ஹெல உறுமய இந்த கூட்டணியை புலி - ஓட்டகக் கூட்டணி என
அடையாளப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகித்து கொண்டு,
சிறப்புரிமைகளை பெற்றுக்கொண்டு, நாட்டின் ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாது,
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை பாதுகாக்க உத்தரவிடும் ரவூப்
ஹக்கீமின் சந்தர்ப்பவாத பிரிவினைவாத, ஐக்கிய விரோத, அரசியலை தோற்கடிக்க
அனைத்து தேசப்பற்றுள்ள மற்றும் இனப்பற்றுள்ள சக்திகள் முன்னோக்கி வர
வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
புலி- ஓட்டக கூட்டணியை கண்டு, திருட்டு கல் பொறுக்கும் ஐக்கிய
தேசியக்கட்சியின் கொள்கைகளையும் நாட்டுக்கு எதிரில் நிர்வாணப்படுத்த ஜாதிக
ஹெல உறுமய நடவடிக்கை எடுக்கும் எனவும் வசந்த ஸ்ரீவர்ணசிங்க மேலும்
கூறியுள்ளார்.
Post a Comment