காவி உடை அணிந்த நான்கு பேர் கொண்ட குழுவொன்றினால் லொறியொன்று தீயிட்டு
கொளுத்தப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தெமட்டகொடை,
பேஸ்லைன் வீதியில் உள்ள இறைச்சி மடுவத்துக்கு அருகிலேயே இச்சம்பவம்
பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த இறைச்சி மடுவத்திலிருந்து இறைச்சி கொண்டுசெல்வதற்காக வருகை தந்துள்ள லொறியே இவ்வாறு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது இன்று அதிகாலை 1.50 மணியளவில் இடம்பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Post a Comment