
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மூன்று மாகாண சபை தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
வடக்கு, மத்திய மற்றும் வட மேல் ஆகிய மாகாண சபை தேர்தல்களிலேயே முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது.
நேற்று (15) இரவு இடம்பெற்ற கட்சியின் உயர்பீட கூட்டத்தின்போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேச்சாளர் ஒருவர் அத தெரணவிற்கு தெரிவித்தார்.
-அத தெரண
Post a Comment