
பள்ளிவாசல் தாக்குதலைத் தொடர்ந்து மகியங்கனையில் இனவாத கும்பல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக நம்பகமாக தெரியவருகிறது. அவ்வாறானதொரு நிலைமையை ஏற்படாதிருக்க ரவூப் ஹக்கீம் கவனம் செலுத்திருவருவதாக தெரியவருகிறது.
.
கடந்த வியாழக்கிழமை தாக்குதலுக்குள்ளான
மகியங்கனை பள்ளிவாசல் நிர்வாகிகள் இன்று திங்கட்கிழமை நீதியமைச்சர் ரவூப்
ஹக்கீமைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். பள்ளிவாசல் ஸ்தாபகத் தலைவர்
எஸ்.எம். சீனிமுஹம்மத் ஹாஜியார் மற்றும் பள்ளிவாசல் பரிபாலனசபை
உறுப்பினர்களான ஏ.எல். நஜிமுத்தீன், மௌலவி ஏ.எம்.எம்.ஏ. பர்ஹான் ஆகியோர்
பள்ளிவாசல் சார்பாக கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பில் பள்ளிவாசலின் வரலாறு,
பின்னணி, முஸ்லிம்களின் அன்றாட சன்மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதில் அதன்
முக்கியத்துவம், இன்றைய சூழ்நிலை என்பவற்றை விளக்கிக் கூறியுள்ளனர்.
பள்ளிவாசல் தாக்குதல் சம்பந்தமான படங்களையும் அமைச்சர் பார்வையிட்டார்.
அங்கு போடப்பட்டிருந்த பன்றியின் உடற்பாகங்கள் சிதறிக் கிடந்ததையும்
அமைச்சர் பார்வையிட்டார்.
மகியங்கனை பள்ளிவாசல் தாக்குதல்
சனிக்கிழமை கண்டியிலும் ஜனாதிபதியுடன் பேசியதாக அமைச்சர் தெரிவித்தார்.
மகியங்கனை பள்ளிவாசல் 1991ஆம் ஆண்டிலிருந்து அங்கு அமைந்திருப்பதாக கூறிய
அமைச்சர், 21 ஆண்டுகளாக அங்கு காணப்படும் பள்ளிவாசலுக்கு எதிராக
மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையிட்டு கவலை தெரிவித்தார்.
Post a Comment