வடமாகாண சபைத் தேர்தலில் அதிக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை
உறுதிப்படுத்திக் கொள்வதற்காக முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பட தமது
விருப்பங்களை வெளிப்படுத்தியுள்ளன.
முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் இதுதொடர்பில் வன்னிமாவட்ட ஹுனைஸ்
எம்.பி.யுடன் இதுதொடர்பில் உத்தியோகபூர்வமற்ற தொலைபேசி உரையாடல்களை
மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில
இலங்கை மக்கள் காங்கிரஸும் ஆராயவுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு
அறியவருகிறது.
வடமாகாண தேர்தலில் அதிக முஸ்லிம் பிரதிநிதிகளை பெறுவதற்காக எத்தகைய
தியாகத்தையும், விட்டுக்கொடுப்பையும் மேற்கொள்ள தயாராகவிருப்தாக அமைச்சர்
றிசாத் பதியுதீன் ஜப்னா முஸ்லிம் இணையமூடாக பகிரங்க அறிவிப்புச்
செய்திருந்தார்.
இந்நிலையில் வடமகாண தேர்தலில் அதிக முஸ்லிம் பிரதிநிதிகளை பெறுவதகாக
விட்டுக்கொடுப்புகளை செய்ய தயாரென ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம்
காங்கிரஸ் எம்.பி.க்களிடமிருந்து ஹுனைஸ் எம்.பி.க்கு தெளிவான சமிக்சை
கிடைத்துள்ளதாகவும் அறியவருகிறது.
வடமகாண தேர்தலில் முழுவதும் ஒரணியின் கீழ் போட்டியிடுவது சாத்தியமற்ற
போதிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் இருதரப்பினரும்
இணைந்து போட்டியிடுவதன் மூலமே முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெறுவது
சாத்தியம் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

Post a Comment