திருகோணமலை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ்
அதிகாரி இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல்
விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ்
நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதகாரி பொலிஸ்
பரிசோதகர் யு.எம்.அன்வரே இவ்வாறு லஞ்சம் வாங்கும் போது கைது
செய்யப்பட்டவராவார்.
வாகன பிரச்சினை ஒன்றை நீதிமன்றின் விசாரணைக்கு விடாமல் கைவிடுவது
தொடர்பிலேயே இலஞ்ச தொகை கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் வாகனங்களை
குத்தகைக்கு விடும் வியாபாரி ஒருவரிடம் கைது செய்யப்பட்டுள்ள திருகோணமலை
பொலிஸ் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதகாரி 10 000 ரூபா இலஞ்சத்
தொகையை கோரியுள்ளார்.
இதனை அடுத்து அவ்வியாபாரி இலஞ்சத் தொகையினை திருகோணமலை மரக்கறி சந்தைக்கு
அருகில் வைத்து வழங்க முற்பட்ட போது, அதனை பெற்றுக்கொள்ள குறித்த பொலிஸ்
அதிகாரி ஸ்தலத்துக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் அங்கு காத்திருந்த இலஞ்ச ஒழிப்பு விசாரணைப் பிரிவின்
அதிகாரிகள் இலஞ்சத் தொகையினை பெற்றுக்கொள்ளும் போது குறித்த பொலிஸ்
அதிகாரியை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
.
Post a Comment