ஆளும் கூட்டணியில் ஒரு அங்கமாக தமது கட்சி இருந்தாலும், அவர்கள் தங்களை
மதிப்பது இல்லை என்கிற கருத்து கட்சி உறுப்பினர்களிடையே இருந்த
காரணத்தினால், தேர்தலில் ஆளும் கூட்டணியில் சேராமல் தனித்து போட்டியிடும்
முடிவை கட்சி எடுத்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலர் ஹஸன்
அலி தெரிவித்தார்.
எனினும் ஆளும் கூட்டணியில் இருக்கும் இதர முஸ்லிம் கட்சிகளுடன் சேர்ந்து
இத்தேர்தல்களை சந்திப்பது குறித்து பரிசீலிக்க முஸ்லிம் காங்கிரஸ் தயாராக
உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். bbc
Post a Comment