Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

கலைந்துபோகும் கனவுகள்..!

Monday, July 220 comments



வடக்கு மாகாண சபை தேர்தல் அறிவிப்பு வெளிவந்த நிலையில் தேர்தல் மேடையும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.வடக்கில் உள்ள ஜந்து மாவட்டங்ளிலும் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் பல்வேறுபட்ட தரப்புக்களும்,கட்சிகளும் தமது வியூகங்களை வகுத்துவருவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன்.
வடக்கில் தமிழ் கட்சிகளை பொருத்தவரையில் அவர்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லாத நிலையில் தமக்குள் பிளவுகள் இருந்த போதும் அவற்றை மூடிமறைத்து ஓரே இலக்கை நோக்கி செல்வதை காணமுடிகின்றது.இதற்கு அப்பால் வடக்கிலிருந்து 1990 ஆம்  ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் தற்போதைய நிலையினை மையப்படுத்தியே வடக்கில் போட்டியிடும் முஸ்லிம் கட்சிகளும்,வேட்பாளர்களும் தமது தீர்மாணங்களை எடுக்க வேண்டும்.
அன்று முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது அந்த வெளியேற்றத்துக்கு துணை போனவர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதான பங்கினை வகித்தது.இன்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் செய்து வரும் அழுத்தங்களும்,விசமத்தனமான பிரசாரங்களும்,ஒரு போதும் முஸ்லிம்களுக்கு விமோசனமாக அமையாது.அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை முஸ்லிம்கள் தவறுதலாக ஏனும் ஆதரிப்போம் என்று கூறினாலும் கூட அது வடக்கில் முஸ்லிம்களின் மீண்டும் ஒரு வெளியேற்றத்துக்கு நாமே வலியேற்படுத்தும் ஒன்றாக மாறிவிடும் என்பதை முதற்கண் புரநிது கொள்ள வேண்டும்.
இன்றை தேர்தலில் தர்மாணம் எடுக்கும் உரிமை வாக்களார்களுக்கு உண்டு என்று  கூறினாலும்,முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளும் அதனை சிந்திக்க வேண்டும்.1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட 20 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களை சேர்ந்த 68 ஆயிரம் பேர்கள் இற்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்னர் புத்தளம் உள்ளிட்ட வேறு பல மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மூன்றரை வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த முஸ்லிம்கள் தமது தாயக மண்ணில் மீள்குடியேற ஆரம்பித்துள்ளன்.வெறும் மீள்குடியேற்றம் மற்றும் இம்மக்களுக்கு நிறைவை ஒரு போதும் கொடுக்காது.தாம் இழந்து எத்தனையோ சொத்துக்களையும்,கல்விச் செல்வங்களையும் மீளு் பெற வேண்டியுள்ளது.இதன இன்று வடக்கில் பெற்றுக் கொள்ள வேண்டுமெனில்,அரச ஆதரவு கொண்ட அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.அது தான் உண்மையும் கூட.வடக்கில் முஸ்லிம்களின் வரலாறு திருப்பி எழுதப்பட வேண்டுமெனில் முஸ்லிம்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது புத்திஜீவிகளின் ஆழமான நம்பிக்கையாகும்.
இந்த காரணங்களை முன்வைத்து தர்க்க ரீதியான கருத்தாடல்களை செய்வது தான் இன்றைய காலத்துக்கு பொருத்தமானதாகும்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டவர்களில் தற்போதைய அமைச்சராக இருக்கும்,றிசாத் பதியுதீன்,மற்றும் பாராளுமன்ற  உறுப்பினரான ஹூனைஸ் பாருக் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.இவர்களின் தெரிவானது வடக்கு முஸ்லிம்களுக்கு தையரியத்தையம்,தற்றுணிவினையும் ஏற்படுத்தியது.அவர்கள் முன்னெடுத்துவரும் பணிகளை அதற்கு சான்றாக இருக்கின்றது.அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஜக்கிய  தேசிய கட்சியில் போட்டியிட்டு தெரிவான மர்ஹூம் நுார்தீன் மசூர் அவர்கள்.தமது காலத்தில் பெரும் பணிகளை மக்களுக்கு ஆற்ற வேண்டும் என்ற துாய்மையான எண்ணத்தோடு இருந்த ஒருவர்,ஆனால் அவர் பிரதி நிதித்துவம் செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கட்சி அரசியல் செய்ததால் தமது சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை பெற்றுக் கொடுக்க முடியாமல் வேதனைப்படுத்த நாட்களையும் அவரது நெருங்கிய நண்பர் என்ற வகையில் இக்கட்டுலைரயினை எழுதகின்ற போது நினைவுக்குவருகின்றது.
இவ்வாறான நிலையில் நடந்து முடிந்த வட மாகாண  உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் அரசாங்கத்துடன் போட்டியிட்டதினால்,மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபையின் அதிகாரத்தை அமைச்சர் றிசாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றது.துரதிஷ்டம் இத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதால் மன்னார் பிரதேச சபை,மாந்தை மேற்கு பிரதேச சபை,கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபையின் தலைமைத்துவங்கள் முஸ்லிம்களாக இருப்பதை இழப்பதற்கு காரணமாகின.இதனால் எமது முஸ்லிம்கள் இழந்ததை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்,இந்த நிலையில் தற்போது நடை பெறவுள்ள வடக்கு மாகாண சபையில் அதிகப்படியான முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை பெற்று பேரம் பேசும் சக்தியாக மாறுவதற்கு முஸ்லிம் பிரதி நிதித்துவத்துக்கான சந்தர்ப்பம் கணிந்துகிடக்கின்றது.இவற்றை வெறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினாலோ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸினாலோ அல்லது இரண்டும் சேர்ந்த பொதுச் சின்னத்தினாலோ முடியாது என்பது தேர்தல் முடிவுகளினை கொண்டு எதிர்வு கூற முடியும்,அதற்கு மாற்றீடான வழி முறைகள் குறித்து சிநிதிப்பது தான் குறிப்பாக விரட்டப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கு இந்த கட்சிகள் செய்யும் நன்மையாகும்.இன்று ஆட்சி அதிகாரங்களை கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி இன்னும் பல வருடங்களுககு இரக்கத்தான் போகின்றது.எதை இம்மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று இருந்தாலும் அவற்றை இந்த அரசாங்கத்தின் ஊடாகத் தான் பெற்றுக் கொடுக்க முடியும் என்பது வெளிப்படையான உண்மையும்,யதார்த்தமுமாகும்.
வடக்கு முஸ்லிம்களி்ன் பூரணமான மீள்குடியேற்றம்,இருப்பு,பாதுகாப்பு என்பவைகளை மையப்படுத்தியே எந்த முஸ்லிம் கட்சியாக இருந்தாலும் வடக்கில் தேர்தல் செய்ய வேண்டியது.இந்த மக்களுக்கு செய்யும் பெருங் கைங்கரியமாகும்.வடக்கு மாகாண சபை தேர்தலில்,அமைச்சர் றிசாத் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் ஒன்று சேர்ந்து ஆளும் கட்சியின் பட்டியலில் தமது வேட்பாளர்களை நிறுத்தி அவர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் மட்டும் தான் வடமாகாண முஸ்லிம்கள் தமது மண்ணிலிருந்து மீண்டும் ஒரு வெளியேற்றத்தை அனுபவிக்கமால் தடுக்க முடியும்.தற்போது ஏற்பட்டுள்ள நல்லதொரு சந்தரப்பத்தை இரு தலைமைகளும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதில் வடக்கு முஸ்லிம்களும்,அமைப்புக்களும் மிகவும் அக்கறையுடன் காணப்பபடுகின்றனர்..இதற்கான பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தில் விட்டுக் கொடுப்பை செய்யாவிட்டால் வடக்கு முஸ்லிம்களின் இழப்புக்களுக்கு பெரும் பங்கினை ஆற்றிய கட்சியாக மாறுவதை ஒரு போதும் தடுக்க முடியாது.தமது கட்சி  நலன்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தி எடுக்கின்ற தீர்மாணம் ஒர போது வடக்கு முஸ்லிம்களின் எதிர்காலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகவே அமையும் என்பதை புரிந்து விட்டுக் கொடுப்புடன் செயலாற்ற வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது.
இவ்வண்ணம்
உரிமைகள் மறுக்கப்பட்ட வடமாகாண முஸ்லிம் அமைப்பு
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by