
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களில் தேசிய ஐக்கிய முன்னணியின் 9
வேட்பாளர்கள் ஐ.தே. கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில்
போட்டியிடவுள்ளதாக அம் முன்னணியின் தலைவர் அசாத்சாலி தெரிவித்தார்.
செப்டெம்பரில் இடம்பெறவுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பாக தேசிய
ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கருத்து தெரிவிக்கையிலேயே
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மூன்று மாகாணங்களிலும் ஐ. தே.
கட்சியுடன் இணைந்து போட்டியிட இணக்கம் காணப்பட்டுள்ளது. கண்டியில் நான்
போட்டியிடுகின்றேன். ஏனைய மாகாணங்களில் வடக்கிலும் புத்தளம் குருநாகலில்
வவுனியாவில் தலா ஒருவர் வீதம் எமது உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர். அது
போன்று மாத்தளையிலும் மன்னாரிலும் இரண்டு பேர் வீதம் எமது உறுப்பினர்கள்
போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 9 உறுப்பினர்கள் ஐ. தே. கட்சியுடன் போட்டியிடுகின்றோம்.
அரசாங்கத்தின் இனவாதம், மதவாதத்திற்கும் எதிராகவே களமிறங்குகின்றோம்.
அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதே எமது இலக்காகும்.
.
Post a Comment