வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டியதாலும், அங்கு பள்ளிவாசல்களில் ஒலித்த
பாங்கோசையை தடுத்து, அல்லாஹ்வின் இல்லங்கள் மூடப்பட்டதாலுமே பயங்கரவாரதப்
புலிகள் அழிந்து போயினர். அதுபோன்று தென்னிலங்கையில் பள்ளிவாசல்களுக்கு
எதிராக யாரெல்லாம் செயற்படுகிறார்களோ அவர்கள் அழிந்து போகட்டும், அவர்கள்
நிச்சயம் அழிவார்கள், அவர்கள் அழிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றத்தில்
சபிக்கிறேன் என வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக்
தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை, 26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது,
இன்று, வெள்ளிக்கிழமை, நான் நோன்பு நோற்றவனாக இந்தப் பாராளுமன்றத்தில்
உரையாற்றுகிறேன். எனது பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரிப்பான் என்ற அதீத
நம்பிக்கையில் உரையாற்றுகிறேன். முஸ்லிம்களுக்கு எதிராகவும், அவர்கள்
தொழுகையில் ஈடுபடும் பள்ளிவாசல்களுக்கு எதிராகவும் நடக்கும் அக்கிரமங்களை
உலகம் அறியும்.
வெளிநாடுகளிலுள்ள இலங்கை முஸ்லிம்களிடத்திலும், உள்நாட்டு
முஸ்லிம்களிடத்திலும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அழுது அழுது இறைவனிடம்
மன்றாடுங்கள். இந்த நோன்பு நாட்களில் எமது பிரார்த்தனைகள்
அங்கீகரிக்கப்படும். யார் எமக்கெதிராக, எமது பள்ளிவாசல்களுக்கு எதிராக
செயற்பாடுகிறார்களோ அவர்கள் நாசமடையட்டும் என பிரார்த்தனை செய்யுங்கள்.
அவர்களை சபியுங்கள்.
முஸ்லிம்களுடனும் , முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை நாசப்படுத்தியதாலும்தான்
புலிகள் அழிந்தனர். ஒழிந்தனர். அவ்வாறுதான் தென்னிலங்கையிலும் நடைபெறும்.
Post a Comment