
கல்முனை மாநகர சபையின் பொறியியல் மற்றும் சுகாதார பிரிவு உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கபடுகின்ற பணியினை துரிதபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன் போது உத்தியோகத்தர்கள் தமது பணியினை துரிதபடுத்துவதில் உள்ள குறைகள் தொடர்பில் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாகிப் கேட்டறிந்து அதற்கான தீர்வினையும் வழங்கினார்.
எதிர்காலத்தில் குறித்த பிரிவினர்களால் முன்னெடுக்கபடுகின்ற சேவைகள் எவ்வித தடங்கலும் இன்றி இடம்பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இக்கலந்துரையாடல் கூட்டத்தில் மாநாகர ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி மற்றும் உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர் .

Post a Comment