
தேசியப்பட்டியல் அஸ்வருக்கு ஜனாதிபதி புகழாரம் பாடுவதற்கு எதையெல்லாம் பேசுவது எனும் வரையறை மீறி தலையிலடித்துவிட்டது.
சஜித் பிரேமதாசவுக்கு பதிலளிப்பதற்காக
நேற்று நாடாளுமன்றில் உளறிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர்
பேசுகையில் கடந்த காலங்களில் நாட்டில் அதிலும் குறிப்பாக கொழும்பில்
தமிழர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையிருந்ததாகவும் தற்போது அந்நிலை
மாறி விட்டதாகவும் தெரிவித்ததோடு இதற்கு உதாரணமாக கொடஹேன முதல் வெள்ளவத்தை
வீதிகளில் தமிழ் பெண்கள் ஒய்யாராமாக நடைபோடும் காட்சியை வந்து
கண்டுகளிக்கும் படி சஜித் பிரேமதாசவுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
அழகான தமிழ் பெண்கள் தெருக்களில்
ஒய்யாரமாக நடைபோடுவது கண்கொள்ளாக் காட்சியெனவும் அதை சலிக்காமல்
பார்த்துக்கொண்டேயிருக்கலாம் எனவும் அவர் ரசனையுடன் சுட்டிக்காட்டியமை பல
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் புருவங்களையே உயர்த்தச்செய்ததாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
Post a Comment