நாளை 18ம் திகதி (18.06.2013) செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள கிழக்கு
மாகாணசபையின் சபை அமர்வில் தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.
குறிப்பாக தகுதி வாய்ந்த அதிபர்கள், இலங்கை அதிபர் சேவை பரீட்சையில்
சித்தியடைந்துள்ள அதிபர்களை இதுவரை பாடசாலைகளுக்கு நியமிக்காமை, ஆசிரியர்
இடமாற்றம், பிந்தங்கிய பாடசாலைகளுக்கு வளங்களை பங்கீடு செய்யாமல் நகர்ப்புற
பாடசாலைகளுக்கு மட்டும் அதிகமா பங்கீடு செய்தல், பொத்துவில் பிரதேசத்தில்
உள்ள ஆசிரியர் சமமின்மையில் செய்வதில் காட்டப்படுகின்ற அக்கறையின்மை போன்ற
பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக கிழக்கு மாகாணசபையின் சபை அமர்வில்
தனிநபர் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் மிக நீண்ட காலமாக நிலவும்
அதிபர் பற்றாக்குறையை, அதிபர் பரீட்சையில் சித்தியடைந்த அதிபர்களைக்
கொண்டு நிவர்த்தி செய்யுமாறு உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள்விடுத்தும்;
இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் செயற்பட்டு வருகின்றமை அதேபோன்று
இவ் வலயத்தில் உள்ள ஆசிரியர் இடமாற்றம் என்பனவும் மிக முக்கியமாக
பேசப்படவுள்ளதாகவும் அவர் மேலும்; தெரிவித்தார். கடந்த 21ஆம் திகதி
இடம்பெற்ற சபை அமர்வில் இப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட இருந்த நிலையில் சபை
அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment