
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ
மஜீட் பதவியை இழக்கக் கூடுமென கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு வேறும் ஒருவர் விரைவில் நியமிக்கப்படக்
கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
மாகாண முதலமைச்சர் பதவிக்கு
பொருத்தமானவரை நியமிக்குமாறு ஆளும் கட்சி உள்ளிட்ட கிழக்கு மாகாண சபை
உறுப்பினர்கள் கோரி வருகின்றனர். அண்மையில் இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக ஆளும் கட்சியினர் கிழக்கு
மாகாண சபை அமர்வுகளை பகிஷ்கரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும்
கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் அமர்வுகளை பகிஷ்கரித்து
வருகின்றனர். தற்போதைய மாகாண முதலமைச்சர் செயற்திறனற்றவர் என குற்றம்
சுமத்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக கடமையாற்றி வரும்
அமீர் அலி முதலமைச்சராக நியமிக்கப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
+ comments + 1 comments
please kilakku mahanathukku oru vidiva atpaduthunga muthalla atha sainga please please
Post a Comment