ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கம் தொடர்ந்தும் புறக்கணித்து வருவது
தொடர்பில் நேற்று இடம்பெற்ற அக் கட்சியின் உயர்பீட கூட்டத்தின்போது
காரசாரமான விவாதம் இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினரும் மு.காவின்
செயலாளருமான எம்.ரீ ஹஸன் அலி விடிவெள்ளிக்கு தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசின் அபிவிருத்தி திட்டங்கள்,
தொழில் வாய்ப்புக்கள், அரச வளங்களை பகிர்தந்தளித்தல் உட்பட பல விடயங்களின்
போது முஸ்லிம் காங்கிரஸை அரசு ஓரங்கட்டுவதாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியதாகவும், இதன் பின்னரே
காரசாரமான வாதங்கள் எழுந்தன எனவும் ஹஸன் அலி மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment