ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த 6-ந்
திகதி தொடங்கியது. இதில் 8 நாடுகள் பங்கேற்றன. அவை 2 பிரிவாக
பிரிக்கப்பட்டது.
லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். இந்தியா-இலங்கை அரை இறுதியில் மோதல் நேற்றுடன் லீக் ஆட்டம் முடிந்தது. ஏ பிரிவில் இருந்து இங்கிலாந்து முதல் இடத்தையும், இலங்கை 2-வது இடத்தையும் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன. நியூசிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் வெளியேற்றப்பட்டன.
பி பிரிவில் இந்தியா முதலிடத்தையும், தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்தையும் பிடித்து அரை இறுதிக்கு நுழைந்தன. மேற்கிந்தி தீவுகள், பாகிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன. வாய்ப்பை இழந்த பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகள் ஒரு ஆட்டத்தில்கூட வெற்றி பெறவில்லை.
இன்று ஓய்வு நாளாகும். அரை இறுதி ஆட்டம் நாளை தொடங்குகிறது. பி பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்திய அணி அரை இறுதியில் ஏ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் வருகிற 20-ந் திகதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
நாளை நடைபெறும் முதல் அரை இறுதியில் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்த இங்கிலாந்து, பி பிரிவில் 2-வது இடத்தை பிடித்த தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.

Post a Comment