ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று வியாழக்கிழமை, 13 ஆம் திகதி
நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில்
மாற்றங்களை கொண்டுவருவது குறித்து ஆராயப்பட்டபோது அமைச்சர்களிடையே கடும்
வாக்குவாதம் வெடித்தது.
அமைச்சர்கள் இரு பக்கமாக நின்று சொற்போரில் ஈடுபட்டுள்ளனர். மாகாண
அதிகாரங்களின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பிடுங்கக் கூடாதென
அமைச்சர்கள் வாசு தேவநாணயக்கார, ரவூப் ஹக்கீம், பேராசிரியர் திஸ்ஸ விதாரண,
டி.யூ. குணசேகர ஆகியோர் வாதிட்டுள்ளனர்.
மறுப்பக்கம் அமைச்சர்களான விமல் வீரவன்ச, திணேஷ் குணவர்த்தனா, சம்பிக்க
ரணவக்க ஆகியோர் மாகாண சபைகளை ஒழிக்க வேண்டும் அல்லது காணி, பொலிஸ்
அதிகாரங்களை பிடுங்கிக்கொள்ள வேண்டுமென வாதிட்டுள்ளனர்.
அமைச்சர்களுக்கிடையிலான இச்சந்திப்பு மிகவும் சூடுபிடித்ததாக
காணப்பட்டுள்ளது. இடையிடையே ஜனாதிபமி மஹிந்த ராஜபக்ஸவும் தலையிட்டு தமது
கருத்துக்களை முன்வைத்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் கருத்தும்
மாகாண அதிகாரங்களை குறைப்பதையே நோக்கமாக கொண்டிருந்துள்ளது.
இருந்தபோதும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் குறிப்பிடத்தக்க தீர்மானங்கள்
எதுவும் எட்டப்படாது முடிவுக்குவந்துள்ளது. தொடர்ந்தும் இதுகுறித்து
ஆராயப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் மூலம் இத்தகவல்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைக்கப்பெற்றன.
Post a Comment