
சாய்ந்தமருதில் புதிதாக அமைக்கப்பட்ட
நூலகத்திற்கு மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை எனும் பெயர்
சூட்டப்பட்டதை கல்முனை மாநகர சபை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை முதல்வர்
கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றபோதே இந்த அங்கீகாரம்
வழங்கப்பட்டது.
குறித்த நூலகத்திற்கு சூட்டப்பட்ட ‘மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த
மீனவர் வாசிகசாலை’ எனும் பெயர் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
இப்பெயர் சூட்டப்பட்டு அண்மையில் திறப்பு விழா செய்யப்பட்ட நிகழ்வு பெரும் சர்ச்சையாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வை நிறுத்துமாறு கிழக்கு முதலமைச்சர் தடையுத்தரவு
பிறப்பித்திருந்தார். எனினும் அது கணக்கில் எடுக்கப்படாமல் அந்நிகழ்வு
திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. அதனை மாநகர சபையின் ஆளும் முஸ்லிம் காங்கிரஸ்
உறுப்பினர்கள் உட்பட பலர் பகிஷ்கரிப்பு செய்திருந்தனர்.
அதேவேளை தனது உத்தரவு மீறப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டமை தொடர்பில்
கிழக்கு முதலமைச்சர் கண்டித்ததுடன் கல்முனை மேயருக்கு எதிராக கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
Post a Comment