அடுத்த ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பணிகள் ஜூன் முதலாம் திகதி முதல்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கை பிரஜைகள்
சகலரும்வாக்குரிமையை உறுதிப்படுத்துவதற்கு தங்கள்பெயர்களை பதிவு செய்ய
வேண்டும்.தேர்தல்கள் திணைக்களமும் கிராம உத்தியோகத்
தர்களும் இப்பணியை ஆரம்பித்துள்ளார்கள். இம்முறை வாக்குகளைப் பதிவு
செய்வது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மக்களை
அறிவூட்டுவதற்காக விசேட திட்டங்களை வகுத்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளரும் அவருடைய
அலுவலர்களும் வீதிக்கு இறங்கி மக்களின் பெறுமதிமிகு வாக்குகளைப்
பதிவுசெய்வதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு முன் எந்தவொரு
தேர்தல்கள் ஆணையாளரும் செய்யாத ஒரு பணியை தன் குளிரூட்டிய அறையிலிருந்து
வெளியே வந்த தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய செய்வது பாராட்டப்பட
வேண்டியது.
இலங்கையில் அனேகர் பல்வேறு காரணிகளால்
வாக்குகளைப் பதிவு செய்வதில் அக்கறையில்லாதிருக்கின்றனர். சிலருக்கு
வாக்குகளை பதிவுசெய்யும் உரிமை சில சில காரணிகளால் மறுக்கப்படுகின்றன.
குறிப்பாக வாடகை வீடுகளில் வசிப்போருக்கு தம் வாக்குகளைப் பதிவுசெய்வதற்கு
வாடகை வீடு தடையாக இருக்கின்றது. வாடகைக்கு வழங்குவோர் வாடகையிலிருப்போர்
வாக்குரிமையைப் பதிவு செய்வதனால் வீட்டின் உரிமைக்கு பாதிப்பு ஏற்படும் என
அஞ்சுவது இதற்கு காரணமாகும். வாடகை வீடுகளில் வசிப்போர் குறித்து
தேர்தல்கள் ஆணையாளரது கவனம் ஈர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வாடகை வீடுகளில் வசிப்போர் என்றும்
வாடகைக்காரர்களாகவே கணிக்கப்படுவார்கள். நாட்டிலுள்ள சகல சட்டங்களும்
அதேபோன்று நீதிமன்றத் தீர்ப்புகள் பலவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. எனவே,
வாடகைக்கு வழங்கிய வீட்டுரிமையாளர்கள் இந்த விட யத்தில் பீதிகொள்ள
வேண்டியதில்லை.
தம் வாக்குரிமைகளைப் பதிவு செய்வதில்
தமிழ் பேசும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பதிவு
நடவடிக்கையிலீடுபடும் சில கிராம உத்தியோகத்தர்களின் கெடுபிடிகளை எதிர்
நோக்க வேண்டியுள்ளனர். சிங்கள மொழியில் பணிகள் நடைபெறுவதனாலும் தமிழ்பேசும்
மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குவதுண்டு. கொழும்பு போன்ற சில நகர்களில்
சில வருடங்களில் கணிசமான வாக்காளர்களது பெயர்களைப் பதிவு செய்வதும்
இறுதியில் இடாப்பில் பெயர் இல்லாமலிருந்தது பற்றியும் குற்றச்சாட்டுக்கள்
தெரிவிக்கப்பட்டன.
வாக்காளர் பதிவு விண்ணப்பங்களை தாம்
விரும்பும் எந்த மொழியிலும் நிரப்பி வழங்கினாலும் கிராம அதிகாரி இதனை
ஏற்றுக் கொள்ளவேண்டும். மொழிப் பிரச்சினையைக் கருத வேண்டியதில்லை.
இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களைப்
பொறுத்த வரை வாக்குரிமை முக்கியத்துவம் வாய்ந்தது. அரசிலிருந்து தம்
பங்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு வாக்குகள் ஓர் அளவீடாக உள்ளன. எனவே, தம்
வாக்குகளைப் பதிவு செய்வதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும். விண்ணப்பங்களைப்
பெற்று உரிய நேரத்தில் நிரப்பிக் கொடுப்பதில் அக்கறை காட்ட வேண்டும்.
பாடசாலை அனுமதி முதல் சகல அரச தேவைகளையும் நிறைவு செய்து கொள்வதற்கு
வாக்காளர்களாக இருப்பது அவசியமாகும்.
எனவே இந்த விடயத்தில் எவரும் உதாசீனமாக
இருக்கக்கூடாது. வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது அனேகருக்கு தேர்தல்
ஒன்று வந்ததுமே நினைவுக்கு வரும். வாக்குகளைப் பதிவுசெய்த பின் அது
அத்தாட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதனை உறுதிப்படுத்துவதிலும் அக்கறை காட்ட
வேண்டும். கிராம அதிகாரியோ தேர்தல் உத்தியோகஸ்தர்களோ யாராவது ஒருவரது
பெயரை அத்தாட்சிப்படுத்தாதிருந்தால் அதற்குத் தகுதியான காரணிகளை
அறிந்துகொள்ள வேண்டும்.
வாக்குரிமை மக்களது பிறப்புரிமை. இந்த உரிமை யை உறுதிப்படுத்துவதில் ஒவ்வொருவரும் அக்கறை செலுத்துவது அவசியமாகும்
Post a Comment