13ஆவது திருத்தத்தில் மாகாணசபைகளுக்கான
அதிகாரம் குறைப்பது சம்பந்தமாக நேற்று வியாழக்கிழமை அமைச்சரவை கூடியது.
இவ்விடயம் சம்பந்தமாக ஆராயமுற்பட்டபோது அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒரு வாரகால
அவகாசம் தருமாறு ஐனாதிபதியையும் அமைச்சரவையிடமும் கேட்டுக்கொண்டார்.
19ஆவது திருத்தம் அடுத்தவார பாராளுமன்ற
கூட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இவ்விடயம்
சம்பந்தமாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் டக்ளஸ் தேவாநாந்தா
ஆகியோரும் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகின்றது
இவ்விடயம் சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரசின் அரசியல் கட்சிக் கூட்டத்தில் ஆராய்ந்த பின்பே இதுபற்றி முடிவை
எடுக்க முடியும் என ஹக்கீம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து
13ஆவது திருத்தம் மேலும் ஒரு வாரத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.

Post a Comment