தற்போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க
தெரிவித்துள்ளார்.
பிரதி பொலிஸ்மா அதிபர்கள் கூலிக்கு கொலை செய்யும் நிலைக்குச் சென்றுள்ளதாகவும் வெளிச்சத்திற்கு வராத பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய எஸ்ஐபி, எஸ்பி, ஓஐசிகள் என்ன செய்கிறார்கள் என்பது பிரச்சினைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கை பொலிஸானது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தனிப்பாதுகாப்பு துறையாக மாறியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் பயமின்றி பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தனவை கைது செய்த பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை கண்டுள்ளதாகவும் முதலீட்டாளர்கள் நாட்டைவிட்டு ஓடியுள்ளதாகவும் அவர்களுக்கு பதிலாக இலங்கைக்கு கெசினோகாரர்கள் அழைத்துவரப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, 23 மாதங்களில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு 25 கப்பல்களே வந்துள்ளதாக கூறிய ரவி கருணாநாயக்க, இந்த நிலையில் துறைமுகத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை செலவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நன்றி
(அத தெரண - தமிழ்)
(அத தெரண - தமிழ்)
Post a Comment