பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு உள்ள
நம்பகத்தன்மையை குறைந்த பட்சம் முஸ்லிம் காங்கிரசை இணைத்தாவது
பெற்றிருக்கலாம். அல்லது இனியாவது இணைத்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால்
அந்த தெரிவுக்குழுவின் யோசனைகளை குப்பையில் போடட்டும். என்று ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம்
தெரிவித்தார்.
கல்முனையில், கல்முனைத்தொகுதி
அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான
எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற ‘கல்முனைக்கு வெளிச்சம்’ எனும்
பெயரில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு அமைச்சர்
தெரிவித்தார் .
அவர் மேலும் மேடையில் கூறியதாவது 13
திருத்த சட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக அரசாங்கம் ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரசை விட்டுவிட்டு ஒரு தெரிவுக்குழுவை நியமித்துள்ளது. இது பாரதுரமான
ஒரு விடயமாகும். அது அரசியல் சாதுரியமும் அல்ல. பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு
மிகப்பெரிய அடியும் ஆகும்.
அது இலங்கையின் 18வது திருத்தச்சட்டத்தில்
மூன்றாவது தடவை போட்டியிடுவதற்கு ஜனாதிபதிக்கு தாங்கள் கொடுத்த ஆதரவுக்கு
அவர் செய்த பரோபகாரமாக இப்படியானதொரு பழிவாங்கலை ஜனாதிபதி செய்துள்ளதாக
தெரிவித்தார்.

Post a Comment