வடமாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமென
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று ஞாயிற்றுக்கிழமை
கண்டியில் வைத்து அறிவிப்புச் செய்துள்ளமையானது அவரின் தனிப்பட்ட
தீர்மானமேயென அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பஸீர்
சேகுதாவூத் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சற்றுநேரத்திற்கு முன்னர்
குறிப்பிட்டார்.
தொலைபேசி மூலமாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கருத்துக்கூறிய பஸீர், மேலும் குறிப்பிட்டதாவது,
சனிக்கிழமை நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக்கூட்டத்தில் எனக்கும்
கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் ஏற்பட்ட முரண்பாடு இயற்கையானது. அது
கருத்தியல் ரீதியானது. முஸ்லிம் காங்கிரஸ் ஜனநாயக கட்சி என்ற அடிப்படையில்
இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவது சகஜம் எனத் தொடர்ந்த பஸீரிடம்
அரசாங்கத்துடன் பிளவு அதிகரித்துவிட்டதென கவலைப்படும் நீங்கள், கட்சித்
தலைவருடன் முரண்படுவதை நியாயப்படுத்துகிறீர்களா என ஜப்னா முஸ்லிம் இணையம்
வினா தொடுத்தபோது,
அதற்கு பதில் கூறிய பஸீர், அப்படியல்ல, கருத்துக்கூறுவதற்கான உரிமை முஸ்லிம் காங்கிரஸின் உள்ளது என்றார்.
சரி, உயர்பீடக் கூட்டத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் வடமாகாண
தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட வேண்டுமென. ஆனால் கண்டியில்
நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் ஹக்கீம் வடமகாண தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ்
தனித்துப் போட்டியிடுமென அறிவிப்புச் செய்துள்ளார். இதுபற்றி என்ன
கூறுகிறீர்கள் என பஸீர் சேகுதாவூத்திடம் ஜப்னா முஸ்லிம் இணையம் வினவியது.
இதற்கு பதில் வழங்கிய பஸீர், சனிக்கிழமை நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ்
உயர்பீடக் கூட்டத்தில் வடமாகாண தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்ற
தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. அந்தவகையில் ஹக்கீம் கண்டியில் செய்த
அறிவிப்பு அவரது தனிப்பட்ட முடிவு. அது கட்சியின் முடிவு அல்ல என்றார்.
அப்படியென்றால் வடமாகாண தேர்தலில் தனித்து போட்டியிடுட வேண்டுமென்ற
வலியுறுத்தலை ஹக்கீம் மீறியுள்ளாரா, உங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை
என்னவென்று வினவியபோது.
கட்சி யாப்பின்படி கட்சித் தலைவருக்கு சுயாதீனமாக திர்மானங்களை
மேற்கொள்ளும் அதிகாரம் உண்டு. ஆனால் அந்த தீர்மானத்தை கட்சி உயர்பீடமும்
ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இதுவரை கட்சி அவ்வாறான ஒரு தீர்மானத்தை
மேற்கொள்ளவிலலையெனவும் பஸீர் சேகுதாவூத் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம்
கூறினார்.
இதுகுறித்து மேலதிக விபரங்களை அறிவதற்காக ரவூப் ஹக்கீமின் கையடக்க தொலைபேசி
ஜப்னா முஸ்லிம் இணையம் அழைப்பு எடுத்தது. இருந்தபோதும் மறுமுனையில் எவரும்
பதில் வழங்கவில்லை.
Post a Comment