அரசாங்கத்தை செயலிழக்கச் செய்பவர்கள் தமது
கட்சிக்குள்ளேயே இருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.
கட்சியில் உள்ள ஒருசிலர் அரசாங்கத்தை
செயலிழக்கும் செற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முனைவதாக ஹக்கீம்
குற்றம்சாட்டினார்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கான
தேவை எதுவுமில்லை. எனவே, நாங்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறமாட்டோம்.
அத்துடன், எதிர்வரும் வடக்கு தேர்தலில்
முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளதாகவும் ஹக்கீம் அறிவித்தார்.
அரசுடன் இருந்தவாறே வடக்கில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக மேலும்
தெரிவித்தார்.
Post a Comment