Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

மொஹமட் சியாமின் படுகொலையுடன் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல்கள்

Friday, June 140 comments




பல மில்லியன் கணக்கான பணத்தை கப்பமாக பெற்று மனிதர்களை கடத்தியும் கொன்றும் பல குற்றச் செயல்களுக்காக தற்போது கைது செய்யப் பட்டிருக்கும் பிரதி போலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுடன் இணைந்து கெலனி போலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி சி ஈ வெதிசிங்கவும் மேற்படி குற்றச் செயல்களில் பங்கெடுத்துள்ளார்.
கடத்தப்பட்டு கொல்லப்பட்ட முஹமது  சியாம், கடத்தப்பட்ட தின இரவு பேலிய கொடயில் அமைந்துள்ள மேல்மாகாண வடக்கு பிரிவு பிரதி போலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் மேல் மாடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளார் . அங்கிருந்து சியாமின்   வங்கிக் கணக்கிலிருந்த சுமார் இரண்டு கோடி ரூபா பணத்தை  தமது வங்கிகணக்கில் வைப்பிலிடுவதற்காக வேண்டி இரவு 1.30 மணியளவில் , பிரதி போலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன வுடன்  சேர்ந்து போலிஸ் அதிகாரி வெதிசிங்கவும் வந்துள்ளார். இந்த விடயமாக இவர்கள் இருவருக்கிடையில் பரிமாறப்பட்ட தொலை பேசி உரையாடல்கள் டயலாக் மற்றும் மொபிடெல் தூண்களில் பதிவாகியுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது .
   
மேலும் , இவர்கள் தவிர்ந்த கொழும்பு போலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியொருவர் மீதும் புலனாய்வு பிரிவின் அவதானம் திரும்பியுள்ளது. 
வாஸ் குணவர்த்தனவின் வாங்கிக் கணக்கிலிருந்து 327 இலட்ச ருபாய் பணம் கண்டெடுக்க பட்டுள்ளது. அத்துடன் வாஸ் குணவர்த்தனவின் மனைவி ஷியாமளி பெரேராவின் வாங்கிக் கணக்கிலிருந்தும் 50 இலட்ச ருபாய் பணமும் மகனின் வங்கி கணக்கிளிளிருந்தும் இலட்ச ருபாய்க்கு  மேற்பட்ட பணமும் கண்டெடுக்கபட்டுள்ளது, ஆகவே இதனடிப்படையில் இவர்கள் இருவரிடத்திலும் புலன் விசாரணை பிரிவு விசாரணை செய்ய வேண்டியுள்ளது.
வாஸ் குணவர்த்தனவுடன் இணைந்து போலிஸ் அதிகாரி வெதிசிங்கவும் வர்த்தகர்களை அச்சுறுத்தியும் கடத்தியும்  பல இலட்ச ரூபா பணம் கப்பமாக பெறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டிருக்கும் உப போலிஸ் பரீட்சகர்  பமுனு சிங்க மூலம் வர்த்தகர்களை பயமுறுத்தப்பட்டு அதன் பின் வெடி  சிங்க மூலம்  குறிப்பிட்ட வர்த்தகரை தொடர்பு கொள்ளச் செய்து  “ உங்கள் விடயம் பற்றி நான் டீ ஐ ஜீ யுடன் பேசி சமாளித்து கொள்கிறேன் “ என்று கூறி 10, 20. இலட்ச ரூபாய்கள் கப்பமாக பெற்று இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளார்கள் என்பது பற்றி கைது செய்யப்பட்டுள்ள பமுனு சிங்க ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார் . .  
நீண்ட காலமாக கப்பம் பெற்று வந்த போலிஸ் அதிகாரி வெதிசிங்க, கதிர்காம பிரதேச ரன்மினிதென்ன எனுமிடத்தில் சுமார் 200 இலட்ச ரூபாய்க்கும் மேல் பெறுமதி வாய்ந்த   19 படுக்கையறை வசதிகளை கொண்ட உல்லாச விடுதியொன்றை கட்டி வருகிறார். என்றும் குறிப்பிட்ட இக் கட்டிடத்தை கட்டுவதற்காக சட்டத்திற்கு முரணாக பலாத் காரமாக அரச காணி யொன்றையும் அபகரித்துள்ளார். இது விடயமாக கதிகாம பிரதேச சபையால்  முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது, அதுமட்டுமல்லாது இக்கட்டிடத்தை கட்டுவதற்காக சட்டத்திற்கு முரணாக மணல் அல்லபட்டுள்ளதுடன்.இக்கட்டட நிர்மாணப் பணிகளில் போலிஸ் உத்தியோகஸ்தர்களையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இது விடயமாக கதிகாம பிரதேச சபையால்  முறைப்பாடும் செய்யப்ப ட்டிருந்தாலும் உரிய பொறுப்பதிகாரிகள் பாராமுகமாக இருந்துள்ளனர்.
வாஸ் குணவர்தன மூலம் கப்பம் பெறும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட“ கோட்டே நிஷாந்த அல்லது சக்கு chakku  எனப்படும் பாதாள உலக தலைவனையும் இதுவரை கைது செய்யப்பட வில்லை என்பதும் குறிப்பிட தக்கதாகும் .
      
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by