Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

சங்கக்கார சதம், குலசேகர அதிரடியால் இலங்கை அபார வெற்றி!

Friday, June 140 comments

சங்கக்கார சதம், குலசேகர அதிரடியால் இலங்கை அபார வெற்றி! 
செம்பியன்ஸ் கிண்ண போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து மோதிய நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் இங்கிலாந்து அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.

அதன்படி இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலாந்து சார்பில் ஜொனதன் டிரொட் 76 ஓட்டங்களையும் ரூட் 68 ஓட்டங்களையும் குக் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மலிங்க, எரங்க, ஹேரத் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்களை வீழ்த்தினர்.

294 என்ற வெற்றியிலக்கோடு களமிறங்கிய இலங்கை அணி குமார் சங்கக்காரவின் அபார சதம் மற்றும் குலசேகரவின் அதிரடியின் உதவியில் 47.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 297 ஓட்டங்களைப் பெற்று வெற்றி கொண்டது.

குமார் சங்கக்கார ஆட்டமிழக்காது 137 ஓட்டங்களையும் குலசேகர 58 ஓட்டங்களையும் தில்ஷான் 44, ஜயவர்த்தன 42 ஓட்டங்களையும் பெற்றனர். 

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by