வனவள அமைச்சர் விஜித்த விஜயமுனி சொய்சாவையே யானைகள் சுமார் இரண்டு கிலோ மீற்றருக்கு துரத்திய சென்றுள்ளது.
கதிர்காமம் புத்தல வீதியிலேயே இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 18
வயதிற்கும் 22 வயதிற்கும் இடைப்பட்ட இரண்டு யானைகளே அமைச்சர் பயணித்த
வாகனத்தை இவ்வாறு துரத்தியுள்ளன.
அமைச்சரோ வாகனத்தை சாதாரண வேகத்தில் செலுத்துமாறு கூறிவிட்டு வாகனத்தின்
இருக்கையில் ஏறி யானைகளின் செயற்பாட்டை அவதானித்துக் கொண்டு வந்தார்.
குறித்த பிரதேசத்தில் 25க்கும் 30 க்கும் இடைப்பட்ட யானைகள் இருக்கின்றன.
அவ்விடத்திற்கு வரும் மிருகங்களுக்கு உணவுகளை வழங்க வேண்டாமென வனராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் சாப்பாடு கொடுப்பதனால் யானைகள் வீதிகளுக்கு பிரவேசிப்பதாகவும்
இதனாலேயே இவ்வாறான சம்பவங்கள் நடக்கின்றன என குறிப்பிடுகின்றனர்.
Post a Comment