Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

முஸ்லிம் மக்கள் வாழும் இடங்களிக் சாரயம், கசிப்பு இல்லை: அமைச்சர் நிமல்

Friday, June 140 comments

http://lankamuslim.files.wordpress.com/2013/06/nimal.png 
சிங்களவர்கள்  மதுபானம் ,  சூது பற்றி கூறும் பெளத்த   போதனைகளுக்கு  மதிப்பளைப்பதில்லை,  முஸ்லிம்கள் மதுபானம் ,  சூது தவிர்ப்பை   வலுவாக கைடைப்பிடிக்கிறார்கள்,   சாராயம், கசிப்பு போன்றன முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில்  இல்லை , அதனால் முஸ்லிம்களை  மதிக்கிறேன் என நீர்ப்பாசனத் துறை அமைச்சர் நிமல் சிரிபால டீ சிலவா தெரிவித்துள்ளார் . அமைச்சர் இந்தக் கருத்தை குருதலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்  கலந்துகொண்டு  உரையாற்றும்போது கூறியுள்ளார்.



மேலும் அவர் உரையாற்றுகையில்,

கட்சி அரசியல் என்பது தேர்தல் காலத்தில் மாத்திரமல்ல வெற்றியின் பின்னரும் வாக்களித்த, வாக்களிக்காத அனைத்துத் தரப்பினருக்கும் நன்மை பயக்கும் வகையில் சேவை செய்யப்படல் வேண்டும். அரசியல் தலைவர்கள் என்ற அடிப்படையில் அனைவரையும் சமமாக நோக்க வேண்டும். சில வேளைகளை மக்கள் மத்தியில் அரசாங்கங்களே பிரச்சினைகளையும் இனவாதத்தையும் தூண்டி விடுகின்றன. சிலர் செய்யும் இவாறான தூரநோக்கற்ற செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. அதிமேதகு ஜனாதிபதி பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியது தமிழ் மக்களை ஒடுக்குவதற்கோ அல்லது இம்சிப்பதற்கோ அல்ல.


ஒரு நாடு முன்னேர வேண்டுமானால் இனங்களுக்கிடையில் நல்லுரவு பேனப்படல் வேண்டும். அப்போது தான் சிறந்த ஒரு சமூகத்தை உருவாக்க முடியும். அல்லாஹ்வும், புத்த பெருமானும், ஜேஸுவும் இதனையே கூறியுள்ளனர். என்றாலும் நான் முஸ்லிம்களை ஒரு காரனத்திற்காக மதிக்கிறேன், அதாவது பௌத்தர்கள் “சுராமேரய”  புத்தரின் போதனைக்கு மதிப்பளைப்பதில்லை. என்றாலும் முஸ்லிம்கள் வாழும் இடங்களில் சாராயம், கசிப்பு போன்றன கானப்படுவதில்லை. அது முஸ்லிம் மக்களில் பொருளாதரத்துக்கும், வாழ்வியல் அபிவிருத்திக்கும் பாரிய பக்கபலமாகக் காணப்படுகிறது.


மாற்று மத்தவர்களிடம் கானப்படும் சிறந்த முன்னுதாரனங்களை நாம் கண்டுகொள்ள வேண்டும். அதேபோல நான் பிரதிநிதித்துவப் படுத்தும் பதுளை மாவட்டத்தில் இன ஐக்கியத்தை உண்டுபன்ன வேண்டும் என நான் விரும்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார் .


Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by