ஐக்கிய தேசிய கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேசிய அரசியல் யாப்பு தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தேச அரசியல் யாப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ஐக்கியதேசிய கட்சி அழைப்பு விடுக்குமாக இருந்தால், அழைப்பினை ஏற்க தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்திருந்தது.
இதனிடையே தமது உத்தேச அரசியல் யாப்பு குறித்து அரசியல் கட்சிகளைப் போல பல்வேறு சமூக அமைப்புகளின் கருத்துக்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. என ஐ.தே.க தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, எதிர்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம் போன்றவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
இதன்படி எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment