கல்முனை மாநகர சபையின் இன்றைய மாதாந்த சபை அமர்வில் முதல்வர், பிரதி
முதல்வர் உட்பட ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கறுப்புப்
பட்டி அணிந்து கலந்து கொண்டனர்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை சபா
மண்டபத்தில் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கல்முனை மாநகர சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாவின் வீட்டின் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தே உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சபை அமர்வில் பங்கேற்றனர்.
அதேவேளை இந்த அமர்வில் பிரதி முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கண்டனத் தீர்மானம் ஒன்றை சபையில் சமர்ப்பித்தார். அது சபையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.
இதனை சமர்ப்பித்து உரையாற்றிய பிரதி முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்; மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாவின் வீட்டின் மீதான குண்டுத் தாக்குதல் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகும் என்று குறிப்பிட்டார்.
இத்தாக்குதலை மேற்கொண்ட சூத்திரதாரிகளை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர், பிரதி முதல்வர் உட்பட சகல உறுப்பினர்களும் கல்முனை பொலிஸ் நிலையம் சென்று, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபளியு.எம்.கபார் அவர்களை சந்தித்து இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, விசாரணைகளை துரிதப்படுத்தி உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.

Post a Comment