
ஆயுதப் போராட்டத்தில் சிறுவர்கள் தொடர்பான ஐ.நா செயலாளரின் வருடாந்த அறிக்கையில் இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.
2012இல் அவர்களது ஆள்புலப் பிரதேசங்களிலிருந்த அனைத்துத் தரப்புக்களும் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை அப்பட்டியலில் நீக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமையன்று நியூயோக்கில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்தைய அறிக்கையிடும் காலப்பகுதியின்போது நேபாளம் மற்றும் இலங்கையிலிருந்த அனைத்து தரப்பும் தமது செயற்திட்டங்களை பூரணமாக அமுல்படுத்தியதைத் தொடர்ந்து அப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
2012ஆம் ஆண்டில் அந்த நாடுகளில் சூழ்நிலையில் மேலதிகமாக வன்முறை தொடர்பான பதிவுகள் எதுவும் எந்தத் தரப்பினராலும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment