
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவசர கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நாளை இரவு இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் தகவல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
நேற்று சனிக்கிழமை இரவு கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு எடுத்த தீர்மானத்தின் பிரகாரமே மேற்படி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து கட்சியின் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கட்சியின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன
Post a Comment