
இருந்தபோதும், நாளை குறித்த இரண்டு மாகாண சபைகளையும் கலைக்கப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
வட மேற்கு மற்றும் மத்திய மாகாண சபைகளின் உத்தியோகபூர்வ நிர்வாக காலம் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடைகின்றது.
எவ்வாறாயினும், வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் தேர்தல் நடவடிக்கைகள் ஒரே தினத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
இதற்கு அண்மையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயல் கூட்டத்திலும் அனுமதி வழங்கப்பட்டது.
இதன்படி, வாக்களிப்புக்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் அல்லது 21ஆம் திகதி அன்று இடம்பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சட்ட மூலத்திற்கு அமைய மாகாண சபை கலைக்கப்பட்டு ஒரு வாரத்தினுள் வேட்பு மனு கோரலுக்கான வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணையாளரால் வெளியிடப்படும்.
அதன்படி இரண்டு வாரத்திற்குப் பின்னர் வேட்பு மனுக்கள் கோரப்படும்.
இதேவேளை, அஞ்சல் மூலமான வாக்குப் பதிவுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் வேட்பு மனுக்களுக்கான ஆவணங்களை அச்சிடுவதற்காக அரச அச்சகத்திற்கு நாளை அனுப்பி வைக்கப்படவுள்ளது.
Post a Comment