அரசாங்கத்துடனான ஒப்பந்தங்கள், காணிப்பிரச்சினைகள், இராணுவக் கெடுபிடிகள் குறித்து எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள மு.கா. விஷேட கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக பொதுச் செயலாளர் ஹஸன் அலி எம்.பி. தெரிவித்தார்.
பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில்
இடம்பெறவுள்ள இக் கூட்டத்தில் மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண
சபை உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். கடந்த தேர்தல் காலத்தில்
தற்போதைய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொண்டோம்.
அந்த ஒப்பந்தத்திலுள்ள பல்வேறு விடயங்கள் இன்றும் நிறைவேற்றப்படவில்லை.
இது குறித்து அரசாங்கத்தின் கவனத்துக்குக்
கொண்டு வரவுள்ளோம். கிழக்கில் தினந்தோறும் காணிப் பிரச்சினைகள் அதிகரித்த
வண்ணமுள்ளன. இராணுவத்தினரின் கெடுபிடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து
வருகின்றன. மேலும் பல பிரச்சினைகளுக்கும் மக்கள் இலக்காகி வருகின்றனர்.
இது குறித்து பாராளுமன்ற மாகாண சபை
உறுப்பினர்கள், அதியுயர்பீட உறுப்பினர்கள் இணைந்து கலந்தாலோசிக்கவுள்ளனர். 7
ஆம் திகதி கூட்டத்தில் இது குறித்து விரிவாக ஆராயப்படும். இதன் பின் இங்கு
முக்கிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்படும்.
இத்தீர்மானங்கள் குறித்து எதிர்வரும்
காலங்களில் அரசாங்கத்துடன் பேசுவதற்கும், கிழக்கு மக்களுக்கு அதன் மூலம்
விடிவு பெற்றுக் கொடுக்கவும் கட்சி நடவடிக்கை எடுக்குமென்றும் அவர் மேலும்
தெரிவித்தார்.
Post a Comment