Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

ராஜபக்ஷக்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது: இது வரலாறு கற்பித்த பாடம் - வீரமணி

Tuesday, May 280 comments

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இனப்படுகொலைக்குக் காரணமான சர்வாதிகாரிகள் - கொடுங்கோலர்கள் - அவர்கள் எந்த நாட்டுக்காரர்கள் ஆனாலும், வரலாறு தண்டிக்காமல் விடுவதில்லை.

நாஜிக்கள் என்ற ஹிட்லர், யூதர் இனத்தை அழித்ததற்கு உரிய தண்டனையை பல்வேறு வகைகளில் தீர்ப்புகளில் பெற்று, குற்றம் புரிந்த கொடுங்கோலன் என்று தீர்ப்பாகியது.

உகாண்டா நாட்டு இடி அமீன்கள் இருந்த இடத்தை வரலாற்றுக் குப்பைத் தொட்டியில் எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை!

இலங்கையில் ஈழத் தமிழர் எழுச்சியை அறவே அடக்கி விட்டோம்; அந்த இனத்தையே பூண்டற்றுப் போக அழித்தே தீருவேன் என்று சபதமேற்ற இராஜபக்சே குடும்பத்தினர், அந்தப் பணியில் பெரும் பகுதியை செய்து முடித்து வெற்றியை முத்தமிட்டு விட்டோம் என்று முழங்குகிறார்கள்!

முள்ளி வாய்க்கால் படுகொலை சாதாரணமானதா ? விடுதலைப் புலிகளின் வேட்டை என்ற பெயரால் ஈழத்து எழுச்சிச் சின்னங்களான இளைஞர்களை அறவே அழித்திட பல வகை முறைகளைக் கையாண்டுள்ளன.

ஈழத்துத் தமிழச்சிகள் சுமார் 90 ஆயிரம் பேர் விதவைகள் என்ற கொடுமையைக் கண்டு வெற்றிப் புன்னகை புரிகின்றன - மனிதாபிமானமற்ற மரக்கட்டைகள்!

இந்தக் கொடுமையாளர்களுக்கு - போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனையே கிடையாதா என்று வேதனையோடும், வெந்த நெஞ்சின் புண்களோடும் கேள்வி கேட்கும் மனிதநேயர்களுக்கு ஓர் அருமையான வரலாற்று நிகழ்வு அண்மையில் நடந்துள்ளதைச் சுட்டிக் காட்ட விழைகிறோம்.

கவுதமாலாவைப் பாரீர்!

1982இல் மத்திய அமெரிக்கக் கண்டத்து நாடுகளில் ஒன்றான கவுதமாலா என்ற நாட்டின் இன்றைய நடப்பு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

கவுதமாலா நாடு, ஒரு சிறிய மத்திய அமெரிக்க நாடு. அங்குள்ள பூர்வ குடியினர், மாயர்கள் என்பது வரலாற்றில் முக்கியமானது.

அந்த நாட்டில் 1982இல் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார் இராணுவத் தளபதி ஜெனரல் எஃப்ரெயின் ரியோல் மாண்ட் என்பவர். இந்தப் புரட்சி மூலம் மலைப் பகுதிகளில் இருந்த மண்ணின் மைந்தர்களான ‘இக்சில்மாயன்’ என்ற பூர்வ இன மக்களைக் கொன்று குவித்தான். மொத்தமுள்ள ஜனத்தொகை ஆறரைக் கோடியில், 2 லட்சத்து 50 ஆயிரம் மாயர்கள் கொல்லப்பட்டனர்.

5 வீதமான மக்கள் படுகொலை

17 மாதங்கள் கொண்ட குறுகிய கால ஆட்சியில் ஈவிரக்கம் அற்ற முறையில் இந்த சர்வாதிகாரி இச்சில் மாயன் இன மக்களில் 5 விழுக்காடுகளுக்கு மேல் படுகொலை செய்தான்.

இந்த இனப்படுகொலைக்காக நீதி கேட்டு, கடந்த 30 ஆண்டுகளாக மனித உரிமை இயக்கங்கள் போராடி வந்தன. அதில் நீதி கிடைக்காமல் தாமதிக்கப்பட்டே வந்தது! 30 ஆண்டுகளுக்குப்பின் நீதி கிடைத்துள்ளது இப்போது அவர் ஆட்சியை இழந்ததின் நல்ல விளைவு இது!

பல வகை சூழ்ச்சி, சாமர்த்தியங்களால் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்குள் நுழைந்ததின் மூலம் இந்தக் குற்றச் சாற்றுக்களிலிருந்து விதி விலக்குப் பெற்று நியாயம் நீதியின் கரங்களிலிருந்து தப்பித்தே வந்தான். இரண்டாண்டுகளுக்குமுன் முதல் முறையாக அவன் தேர்தலில் தோல்வியுற்றான். அந்த மகிழ்ச்சியின் செய்தியை அறிந்த மனித உரிமை இயக்கங்களும், மற்ற உள்நாட்டு அமைப்புகளும் அவன்மீது வழக்குத் தொடுக்கக் கோரிக்கை வைத்தனர்.

500 ஆண்டுகளுக்கு முன்பே படுகொலை தொடக்கம்!

கௌதமாலா நாட்டில் வாழ்ந்த மாயன் இனத்தவர்களைக் கொன்றொழிக்கும் கொடுமையை 500 ஆண்டுகளுக்குமுன் அய்ரோப்பியர்கள் கால் வைத்தபோதே தொடங்கி விட்டதாம்! இந்தக் கொடியவனைக் காப்பாற்றும் வகையில் அமெரிக்க ரொனால்ட் ரீகன் இவனைக் காப்பாற்றி விட்டார்! நடவடிக்கைகள் தொடரவில்லை!

80 ஆண்டு சிறைவாசம்!

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்த போது நீதிபதி “கௌவுதமாலாவின் பெரும்பான்மையராக இருக்கும் 21 மாயன் இனக் குடிகளில், “இக்சில் மாயன்” இனத்தவர்களை, அடியோடு அழிக்கும் செயல் திட்டமிட்டே ரியா" மாண்டிற்கு நன்கு தெரிந்தே நடந்துள்ளது. அவர் நினைத்திருந்தால் இந்தப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம்!’’ என்று கூறியுள்ளார்!

இந்தக் கயவனுக்கு 80 ஆண்டு சிறை வாசம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது; இந்தத் தீர்ப்பின் முடிவை நீதிமன்றத்தில் நீதிபதி வாசித்தபோது, அங்கு பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து கூடியிருந்தனர். அவர்களின் பெருத்த ஆரவாரம்; அது மட்டுமா?

பொது மக்கள் சாட்சி

மாயன் இனப் பெண்கள் கண்ணீர் பெருக்கினர்! ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு “நீதி நீதி” என்று பெரு முழக்கத்தை எழுப்பி தீர்ப்பை வரவேற்று மகிழ்ந்தனர்!

இந்த வழக்கு விசாரணையின்போது நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும் தங்களது சாட்சியத்தைப் பதிவு செய்தனர்!

இக்சில் மாயன் இனப் பெண்களின், குழந்தைகள் வீசியெறிப்பட்ட, துப்பாக்கி முனைகளால் குத்திக் கொல்லப்பட்ட கோர நிகழ்வுகளையும் அந்தப் பெண்கள் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தபோது தங்கள் கண்களில் வழிந்தோடிய ரத்தக் கண்ணீரை மறைக்க, முகங்களை மூடிக் கொண்டனர்!

கூட்டுச் சமாதி!

இராணுவத்தால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்ட பெண்கள் பற்றியும், தங்களது தாய், தந்தையர்கள், சகோதரர்களை குழிக்கு அருகில் நிறுத்தி வைத்து, வரிசையாக சுட்டு வீழ்த்தி, அந்தப் பிணங்களை அடுக்கிக் கூட்டுச் சமாதி கட்டிய செயல்கள் - எவ்வளவு பச்சாதாபமற்ற கோரத் தாண்டவம் ஆடின!

இதற்கிடையில் இது தாமதம் ஆகுமோ என்பதுபோன்ற தடைகளும்கூட வந்தன!

நாட்டின் உயர்நீதிமன்றம், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற விசாரணையை மீண்டும் மறுபரிசீலனை செய்யுமாறு ஆணையிட்டது.

காரணம் தற்போது நாட்டின் தலைவராக இருக்கும் பூட்டோபெரே° மோலினா என்பவர் 1980-களில் இக்சில் மாயன்கள் என்ற இனத்தவர் வாழ்ந்த பகுதியில் இராவணுத் தளபதியாக இருந்தபோது அவர்களின் குடிசைகளை எரிப்பதற்கு ஆணையிட்டார் என்ற குற்றச்சாற்று கொண்டு வரப்பட்டது. இதனால் ரியா°மாண்ட் மீதான வழக்கு கால தாமதம் ஆனது.

ஆனால் இறுதி நீதி வென்று விட்டது!

இதற்குமுன் லத்தின் அமெரிக்க நாடுகளில், சில சர்வாதிகாரிகள் தண்டிக்கப்பட்டு சிறைக்குப் அனுப்பப்பட்டார்கள்.

தண்டிக்கப்பட்டவர்கள்

1) அர்ஜென்டினா - ஜோர்ஜ் விதேலா பல குற்றங்கள்.

2) சட்ட விரோதமாக சொத்து சேர்த்து மற்றும் மனித உரிமைக் குற்றங்கள் புரிந்த சிலி நாட்டின் அதிபர் பினோசெட் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு மரணமடைந்தார்.

3) ஆனால் இனப்படுகொலைக் குற்றத்திற்காக இந்த கௌதமாலாவின் இராணுவ சர்வாதிகாரிகளை பல லட்ச ‘இக்சல்மாயன்களை’க் கொன்றொழித்து 80 ஆண்டு தண்டனை பெற்றவர். இதுவே அந்தக் கண்டத்தில் முதல் முறை.

(இந்தத் தகவல்களை 15.5.2013 ‘இந்து நாளேட்டில் அமெரிக்காவில் உள்ள டென்வர் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வு துணைத் தலைவர் ஆரோன் நெய்தர் என்பவர் எழுதியுள்ளார்)

கௌதமாலா நாட்டின் ஜனாதிபதி - கொடுங்கோலனுக்கு 80 ஆண்டுகள் தண்டனை - இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷக்களும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. இது வரலாறு கற்பித்த - கற்பிக்கப் போகும் பாடமாகும்.

(நக்கீரன்)
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by