ஜனநாகய வழி முறைகளை என்றும் பின்பற்றி
வருகின்ற ஆஸாத் சாலி பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட
நடவடிக்கையானது சிறுபான்மை இனத்திற்கெதிரான அரசாங்கத்தின் அடக்கு முறைகளின்
உச்சக்கட்டமே எனவும் இந் நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்றும்
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஏ.சீ.ஹியாஸ்
தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயரும்
தமிழ் – முஸ்லீம் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆஸாத் சாலி புலனாய்புப்
பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தைக் கண்டித்து அவர் விடுத்துள்ள
அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவ் அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டிருந்ததாவது இந்த நாட்டில் மூவின மக்களோடும் இன
ஐக்கியத்துடனும் வாழுகின்ற ஆஸாத் சாலியை புலனாய்வுத் துறையினர் கைது
செய்திருக்கும் நடவடிக்கையானது சிறுபான்மை இனத்திற்கு எதிராக
மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகளின் உச்சக்கட்டமேயாகும்.
இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லீம் சமுகம்
சகல இனங்களோடும் ஒன்றினைந்து ஒற்றுமையாக காலா காலமாக வாழ்ந்து வருகின்றது
எந்த மத கலாசார விடயங்களிலும் கை வைத்ததும் கிடையாது ஆனால் அரசின் பின்னால்
நின்று செயற்படுகின்ற பொது பலசேனா போன்ற இன வாதக் குழுவினர் முஸ்லிம்களை
அடக்கி ஆள்வதற்கான நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக முஸ்லீம்களால் காலா காலமாக
பின்பற்றப் படுகின்ற ‘ஹலால்’ என்கின்ற விடயத்தில் கைவைத்து இனவாதத்தைத்
தூண்டியதுடன் பள்ளிவாசல்களையும் உடைப்பதற்கு காரணகர்த்தாவாக இருந்துள்ளனர்.
முஸ்லீம்கள் பேணி வருகின்ற ‘ஹலால்’
விடயத்தினை கேவலப்படுத்தியும் பள்ளிவாசல்களை உடைத்தும் முஸ்லீம்களின் மனதை
நோகடித்து செயற்பட்டு நாட்டில் இனவாதத்தை ஏற்படுத்தி நாட்டின் அமைதிக்கு
பங்கம் விளைவித்த பொது பலசேனா போன்ற இனவாதக் குழுவினரை பயங்கரவாதச் தடைச்
சட்டத்தின் கீழ் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் மத கலாசார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள
முஸ்லீம் சமூகம் மனம் நொந்து வேதனைப்பட்ட வேளையில் அரசாங்கத்தில் தமது
அமைச்சுப் பதவிகளுக்காகவும் ஏனைய சலுகைகளுக்காகவும் சூழ் நிலைக் கைதியாக
இருக்கும் முஸ்லீம் அரசியல் தலைமைகள் பெசாத நிலையில் முஸ்லீம் என்ற
அடிப்படையில் முஸ்லீம் சமூகத்திற்காக குரல் கொடுத்த ஆஸாத் சாலியை கைது
செய்திருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.
இந்த நாட்டின் சிறு பான்மைச் சமூகத்தை
அடக்கி ஆள விரும்புகின்ற அரசு இது என்பதை ஆஸாத் சாலியின் கைது மூலம் அதன்
உச்சக் கட்டத்தை வெளிக்காட்டியுள்ளது. இது அரசாங்காத்தின் அராஜக
நடவடிக்கையாகும். முஸ்லீம் சமூகம் பாதிக்கப்படும் போது முஸ்லீம்
சமூகத்திற்கு நியாயம் வேண்டி முஸ்லீம் ஒருவர் பேசாமல் யார் பேசுவார்? இதனை
பயங்கரவாத நடவடிக்கை என்ற சொல்வது? ஆப்படியென்றால் பொது பலசேனா அமைப்பினர்
மேற்கொள்ளும் இனவாத நடவடிக்கையை என்னவென்று சொல்வது. ஆஸாத் சாலி ஒரு ஜநனாயக
வாதி இவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை
எண்ணி முஸ்லீம் சமூகம் கவலையடைகின்றது ஆதலால் அவரை விடுதலை செய்யுமாறு நான்
கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment