அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,
தயவான வேண்டுகோள்
நான் அசாத் சாலியின் மகளான அமீனா சாலி.
நான் இந்த விசேடமானதும் அவசரமானதுமான வேண்டுகோளை தங்களது மேலான கவனத்துக்கு
கொண்டுவருவதன் மூலம் கேட்டுக்கொள்வதாவது,
எனது தந்தையான அசாத் சாலியின் தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கை தொடர்பில் தாங்கள் நன்கறிந்துள்ளீர்கள்.
நாட்டின் ஜனநாயகத்துக்கும் சமாதானத்துக்கும் மாத்திரம் போராடிய பாசமிகு எனது தந்தை நியாயமற்ற முறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நேரத்தில் இருந்து இதுவரை
எந்தவித உணவையோ பானத்தையோ உட்கொள்ளாமல் இருப்பதால் பாசமிகு எனது தந்தையின்
உடல் நிலை மிகவும் கவலைக்குரிய நிலையை அடைந்துள்ளது. நானும் எனது தாயாரும்
அவரை சந்தித்து உணவோ பானமோ உட்கொள்ளுமாறு மன்றாடியும் அவர் அதனை ஒரேயடியாக
நிராகரித்துவிட்டார்.
தாங்கள் எமது குடும்பத்துடன் மிகவும்
நெருங்கிய நண்பராக இருந்து வந்துள்ளதை எனது சிறு வயது முதலே நான் அறிவேன்.
அதனால் எனது பாசமிகு தந்தைக்கு தங்களது கரங்களால் ஒரு குவளைத் தண்ணீர்
கொடுத்தால் அவர் நிச்சயமாக வழமை நிலைக்கு திரும்புவார் என நான்
நம்புகின்றேன்.
தாங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக
வருவதற்கு எனது தந்தை எந்தளவு தியாகங்களை செய்திருந்தார் என்பதை தாங்களும்
இந்நாட்டு மக்களும் நன்கறிவர்.
ஆகவே, தங்கள் கரங்களால் வழங்கப்படும் ஒரு
குவளைத் தண்ணீர் மூலம் இந்த நாட்டின் சமாதானத்துக்காக தன்னையே அர்ப்பணித்த
தங்கள் நண்பரின் உயிரை காப்பாற்ற முடியும் என நான் திடமாக நம்புகின்றேன்.
ஆதலால் இது தொடர்பில் கருணையுடன் தங்கள் கவனத்தை செலுத்தி எனது தந்தைக்கான எனது இந்த கோரிக்கையை நிறைவேற்றித்தருமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
ஆதலால் இது தொடர்பில் கருணையுடன் தங்கள் கவனத்தை செலுத்தி எனது தந்தைக்கான எனது இந்த கோரிக்கையை நிறைவேற்றித்தருமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி
இப்படிக்கு,
விசுவாசமுள்ள,
அமீனா சாலி
அமீனா சாலி
Post a Comment