முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் முன்னாள் பிரதம
நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவும் இணைந்து புதியதோர் அரசியல் கட்சியை
உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது
புதிய கட்சி ஒன்றினை உருவாக்கும் தங்களது திட்டம் தொடர்பில் சிறிலங்காவிலுள்ள மேற்கத்தைய நாடுகளின் தூதுவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரபலங்கள் மற்றும் தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் பலரும் இந்த புதிய அரசியல் கட்சியில் இணைந்து செயற்படவுள்ளனர்.
முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான வழக்குகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதும் இந்தப் புதிய அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் மகன் விமுக்தி குமாரதுங்க நியமிக்கப்படவுள்ளார் என்றும் மேலும் தெரிய வருகிறது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் விசேட குழு ஒன்று அமைத்துள்ளதாக ஏற்கனவே பாரிஸ்தமிழ்.கொம் செய்தி வெளியிட்டிருந்தது.
சமகாலத்தில் சிறிலங்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார ரீதியான குழப்ப நிலையினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் பலமானால் அது தற்போதைய ஆளும் அரசு பெரும் சவாலாக இருக்கும் என அரசியில் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment