கொழும்பு முஸ்லீம் மகளிர் கல்லூரியின் இஸ்லாமிய தின விழா நேற்று (14) ஆம் திகதி கல்லூரியின் ஹாஜரா மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப்
ஹக்கீம் கலந்துகொண்டு சிறப்பித்தார். கல்லூரி அதிபர் ஹஜர்ஜான் மன்சுர்
தலைமையில் இவ் வைபவம் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு
பதக்கமும் சான்றிதழும் பிரதம அதிதியால் வழங்கி வைக்கப்பட்டது. மாணவிகளது
இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
Post a Comment