Homeஆஸாத் சாலியின் உடல் பலவீனமடைகிறது - குடும்பத்தினர் பார்வையிட அனுமதி மறுப்பு
ஆஸாத் சாலியின் உடல் பலவீனமடைகிறது - குடும்பத்தினர் பார்வையிட அனுமதி மறுப்பு
கொழும்பு
தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸாத் சாலியை
பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸாத் சாலியின் மருமகன் ஆதிப் ராஜா ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தகவல் தருகையில்,
ஆஸாத் சாலியின் மனைவி, மகள், மருமகன் ஆகிய எனக்கும் ஆஸாத் சாலியை
வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிடலாமென எங்களது சட்டத்தரணி கூறினார்.
இதையடுத்து நாங்கள் அவரை பார்வையிடுவதற்காக வைத்தியசாலை சென்றோம். எனினும்
எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது எங்களுக்கு பெரும் ஏமாற்றமாக
அமைந்துவிட்டது என்றார்.
இதேவேளை ஆஸாத் சாலி தொடர்ந்து சாப்பிட
மறுப்பதால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அவரது
குடும்பம் கவலையில் மூழ்கியுள்ளதாகவும் ஆஸாத் சாலியின் மருமகன் ஜப்னா
முஸ்லிம் இணையத்திற்கு மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment