கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக
நிர்மாணிக்கப்பட்டுள்ள வாசிகசாலைக்கு கல்முனை மாநகர மேயர் சிராஸ்
மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டு திறப்பு விழா செய்வதற்கு
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் தடை உத்தரவு பிறப்பித்திருந்த
போதிலும் குறித்த நிகழ்வு திட்டமிட்டபடி இன்று மாலை 5.00 மணி தொடக்கம்
நடைபெற்று வருகின்றது.
கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெறுகின்ற இவ்வைபவத்தில் நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ‘மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை’ எனும் பெயரிலான அந்நூலகத்தை திறந்து வைத்துள்ளார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட கட்சிப் பிரமுகர்கள் பலரும் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
சாய்ந்தமருது புதிய நூலகத்திற்கு மேயரின் தந்தையின் பெயர் சூட்ட முதலமைச்சர் தடை விதிப்பு!
கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படவுள்ள நிகழ்வை உடனடியாக தடை செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உத்தரவிட்டுள்ளார்.
மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை’ என பெயர் சூட்டப்பட்டு நாளை வியாழக்கிழமை மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட விருக்கின்ற நூலகம் தொடர்பிலேயே மாகாண முதலமைச்சர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
குறித்த வாசிகசாலைக்கு கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப்தன்னிச்சையாக தனது தந்தையின் பெயரை சூட்டியமையைத் தொடர்ந்து கிளம்பியுள்ள எதிர்ப்பைத் தொடந்தே முதலமைச்சர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தனது செயலாளர் யூ.எல்.ஏ.அஸீசுக்கு எழுத்து மூலம் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
“அரசாங்க நிதியினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள வாசிகசாலைக்கு தனி நபர் ஒருவரின் பெயர் சூட்டப்பட்டு 23.05.2013 வியாழக்கிழமை திறக்கப்படுவதாக மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் எனக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
எனவே மேற்படி வாசிகசாலை திறப்பு விழாவையும் பெயர் சூட்டும் நடவடிக்கையையும் உடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என்று உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment