கிழக்கு மாகாண சபைக்கூட்டம் 21-05-2013 செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த
போதிலும் கட்சி தலைவர்களுக்கான கூட்டத்தில் சபை அமர்வில் நடைபெற வேண்டிய
நடவடிக்கைகள் தீர்மாணிக்கப்பட்டது.
முக்கியமான ஏழு பிரேரணைகள் விவாதிக்கப்படயிருந்தன.சபை கூடியதும் முதலாவது
பிரேரணை ஐக்கிய தேசிய கட்சித் குழு தலைவர் இம்ரான் மஹ்ரூபினால் கிண்ணியா
பகுதிக்கான பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான
பிரேரணையாகும்.
அப்பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஆளும் கட்சி
உறுப்பினருக்கும்,எதிர்க்கட்சி உறுப்பினருக்கும் இடையில் தர்க்கம்
ஏற்பட்டது. தர்க்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சபை நடவடிக்கைகளை மு.ப.11 மணி
வரையும் ஒத்திவைப்பதாக கிழக்கு மாகாண சபைத்தலைவி ஆரியவத்தி கலப்பத்தி
அறிவித்தார்.
மீண்டும் 11மணிக்கு சபை கூடியது. 11.20 மணியளவில் சபைத்தலைவி சபை
மண்டபத்துக்கு வருகை தந்தார். அடுத்த மாதம் 18ம் திகதி வரை சபை ஒத்தி
வைக்கப்படுவதாக அறிவித்தார். எக்காரணமும் கூறப்படாமல் சபை
ஒத்திவைக்கப்பட்டது.சபைத்தலைவி உடனடியாக வெளியேறி விட்டார். புன்னர்
எதிர்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி முதலமைச்சரிடம் என்ன காரணத்திற்காக சபை
ஒத்தி வைக்கப்படுகின்றது என கேட்டார். அதற்கு முதலமைச்சர் பதில் ஏதும்
கூறவில்லை எனவும் தெரிவித்தார்.
காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமல் சபையை இவ்வாறு ஒத்திவைப்பது மக்கள் பிரதி
நிதிகளுடைய கருத்துக்களை முன் வைக்கின்ற தடுப்பதாகவே கருத
முடிகின்றது.இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாவரும் சபையின்
பிரதான வாயலுக்கு முன்னால் 1 மணித்தியாலம் வரை அடையாள போராட்த்தில்
ஈடுபட்டனர்.

Post a Comment