முஸ்லிம்கள் அதிகம் செறிந்து வாழும் பிரதேசமான மட்டக்களப்பு காத்தான்குடிப்
பிரதேசத்தில் பிரதான ஜும்மாப் பள்ளிவாயல்களில் முஹம்மத் (ஸல்)அவர்களின்
வழிமுறைக்கேற்ப தஹஜ்ஜுத் பாங்கு (அதிகாலையில் அதான் சொல்லுதல்) சொல்வதை
அமுல்படுத்துவதற்கான தீர்மாணத்தை காத்தான்குடிப் பள்ளிவாயல்கள் முஸ்லிம்
நிறுவனங்களின் சம்மேளனம் எடுத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கடந்த 14.04.2013ஆம் திகதிய சம்மேளன நிருவாக
சபைக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதன் பிரகாரம் காத்தான்குடி ஜம்இய்யதுல்
உலமாவின் 08.05.2013ஆம் திகதிய கடிதத்தின் படி இதற்கான அங்கீகாரம்
கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து சம்மேளனத்தின் 12.05.2013ஆம் திகதிய நிருவாக
சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், காத்தான்குடி
பிரதேசத்தில் உள்ள ஆறு பிரதான ஜும்ஆ பள்ளிவாயல்களான ஜாமிஉழ்ழாபிரீன் பெரிய
மீரா ஜும்ஆ பள்ளிவாயல், காத்தான்குடி-முஹைதின் மெத்தைப் பெரிய ஜும்ஆ
பள்ளிவாயல், காத்தான்குடி-மஸ்ஜிதுல் மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல்,
காத்தான்குடி-01,பதுறிய்யா ஜும்ஆ பள்ளிவாயல், புதிய காத்தான்குடி-01,பெரிய
ஜும்ஆ பள்ளிவாயல், புதிய காத்தான்குடி-03,நூறாணியா ஜும்ஆ பள்ளிவாயல், புதிய
காத்தான்குடி-06ஆகிய ஆறு ஜும்ஆ பள்ளிவாயல்களில் மாத்திரம் ஸுபஹ்
தொழுகைக்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர் தஹஜ்ஜுத் அதான் சொல்வதென்றும்,
ஏனைய பள்ளிவாயல்களில் ஸுபஹ் தொழுகைக்காக மாத்திரம் அதான் சொல்வதென்றும்
தீர்மானிக்கப்பட்டது.
இதன்பிரகாரம்; கடந்த 24.05.2013ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம்
குறித்த பள்ளிவாயல்களில் தஹஜ்ஜத் அதான் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
குறித்த விடயம் அமுல் தொடர்பில் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையிடம் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment