Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

கல்முனை பிரதேசத்தில் பாரிய கடல் கொந்தளிப்பு;கல்முனை மேயர் ஸ்தலத்திற்கு விஜயம்

Monday, May 130 comments

சாய்ந்தமருது , மாளிகைக்காடு மற்றும் கல்முனைக்குடி பிரதேசத்தில் இன்றிரவு(12)  ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினை தொடர்ந்து கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த இயந்திர படகுகள் மற்றும் தோணிகள் உடைப்பெடுத்து கரையொதுங்க ஆரம்பித்துள்ளன.(நேரம் - 23:44)

நங்கூரம் அறுந்த நிலையிலும் உடைந்த நிலையிலும் பல இயந்திரப்படகுகளும் தோணிகளும் கரையொதிங்கியுள்ளன. கடல்நீர் வழமையை விட கரைக்கு வந்துள்ளதுடன் மீனவர்கள் கரையிலுள்ள தமது இயந்திரப்படகுகள் , வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பகான இடத்திற்கு
கொண்டு செல்வதில்  பலவிதமான கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
செய்தியறிந்த பிரதேச மக்கள் இரவு என்றும் பாராது கடற்கரையோரமெங்கும் திரண்டு காணப்படுகின்றனர்.

நிலமையினை நேரில் கண்டறிவதற்காக கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கடற்கரை பிரதேசத்திற்கு இன்றிரவு விஜயம் செய்து மீனவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் கல்முனை பிராந்திய கடற்படை பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு உடனடியாக மீனவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன் தற்போது கடல்கொந்தளிப்பு காரணமாக கடலில் நங்கூரமிடப்பட்டுள்ள ஏனைய இயந்திரப்படகுகளையும் அதில் தங்கியுள்ள மீனவர்களையும் கரை சேர்ப்பதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.

செய்தி இணையத்தளத்திற்கு போகும் வரை கடல் கொந்தளிப்பாக இருப்பதுடன் மேலும் பல தோணிகளும் இயந்திரப்படகுகளும் கரையை நோக்கி வருவதனை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by